அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 11 மே, 2020

'உள்ளுறை காமம்!’

இப்பதிவு, நான் எழுதிய ஒரு குறும்புதினத்தின்[அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டது] முன்னுரை.
நம் முன்னோர்களில் மகான்கள், மகரிஷிகள், அவதாரங்கள், முனிவர்கள், ஞானிகள் எனப்படுவோர் காம உணர்ச்சியை முற்றிலுமாய் வென்று வாழ்ந்ததாகப் பழம் பனுவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆழ்ந்து சிந்தித்தால், பல்வேறு உணர்ச்சிகளுடன் காலமெல்லாம் போராடுவதும், முடிவில் செத்துத் தொலைப்பதும்தான் மனிதகுலத்துக்கான விதி என்பது புரியும். உண்மை இதுவாக இருக்கையில், மேற்கண்டவர்கள், மிக வலிமை வாய்ந்த காம உணர்ச்சியை முற்றிலுமாய் அடக்கி ஆண்டார்கள் என்பது மிகைப்படுத்தும் செயல் என்றே தோன்றுகிறது. ஏதாவது ஒரு வகையில் வடிகால்[சுய இன்பம்?] தேடியிருக்கக்கூடும்.

உணவு உண்ணாமலே ஒருவர் முழு ஆயுளையும் வாழ்ந்து கழிப்பது எப்படிச் சாத்தியம் இல்லையோ, அது போலத்தான் காம இன்பத்தை முற்றிலுமாய் நிராகரித்து வாழ்ந்து முடிப்பதும்.

நம்மால் எதையெதையெல்லாம் சாதிக்க இயலவில்லையோ அதையதையெல்லாம் நம் முன்னோர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் என்று சொல்லிக்கொள்வதால் ஒருவகையான ஆறுதலைப் பெறுகிறோம் என்பது மட்டும் உண்மை.

காம உணர்ச்சியை அலட்சியப்படுத்தி வாழ முயன்று தோற்றுப்போன இரு மாந்தர்களின் மனமாற்றம் குறித்ததே இந்தக் குறும்புதினம்.

கதை மாந்தர்களின் உணர்ச்சிபூர்வ உரையாடலும், கதைக்குத் தேவையான சிறு சிறு சூழல் வர்ணனையும், விறுவிறுப்பான நிகழ்ச்சிப் பின்னலும் இந்தக் குறும்புதினத்திற்குச் சுவைகூட்டுவன ஆகும்.

'ஒன்றுக்குள் ஒன்றாகத் தலை நிமிர்த்தி நிற்கும் சிகரங்கள். பிரமிக்க வைக்கும் வகை வகையான மரங்கள். வண்ண வண்ண மலர்கள். தம்முள் பின்னிப்பிணைந்து உறவாடும் கொடிகளும் செடிகளும். காணும் இடமெல்லாம் நெஞ்சைக் கட்டிப்போடும் அழகு...'

இது, ஓர் நிகழ்விட வர்ணனை.

'தசைநார்கள் இறுகி, நரம்புகள் முறுக்கேற விறைத்து நின்றான் அவன். மனதைக் கல்லாக்கிக்கொண்டு கிடுகிடு பள்ளத்தில் எகிறி விழ முற்பட்டபோது.....

சக்தி மிகுந்த மின்சாரம் போல ஏதோ ஒன்று தாக்கிட, பின்னோக்கிச் சரிந்து விழுந்து உருண்டான். தான் விழுந்தது அருவி கொட்டும் பல நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் அல்ல என்பது புரிவதற்குப் பல வினாடிகள் தேவைப்பட்டன அவனுக்கு. தெளிவு பெற்று எழுந்து, கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். அவனுக்கு மிக அருகில் மிக அழகான பெண்ணொருத்தி நின்றுகொண்டிருந்தாள்...'

இது, சோர்வில்லாமல் வாசித்திடத் தூண்டும் நிகழ்ச்சி வர்ணனை.

'மனிதன் நினைத்தபடியெல்லாம் வாழத்தான் முடிவதில்லை. நினைத்தபடி நினைத்த நேரத்தில் செத்துவிடவும் முடியாது என்பதை அப்போதைய அந்த அனுபவம் அவனுக்குப் புரிய வைத்தது...'

இது, உள்மனதை உலுக்கும் ஒரு யதார்த்தமான அனுபவக் கருத்தாக்கம்.

மேற்கண்டவை போன்ற வர்ணனைகளையும், நிகழ்வுகளையும் கருத்தாக்கங்களையும் உள்ளடக்கியது இந்தச் சின்னஞ்சிறு புதினம்.

நீங்கள், அமேசான் கிண்டிலின் சந்தாதாரராக இருந்தால், இதை இலவசமாக வாசித்து மகிழலாம். நீங்கள் வாசித்த அத்தனை பக்கங்களுக்கும் பக்கத்துக்கு இத்தனை காசு என்று கணக்கிட்டு,  அமேசான் எனக்கான பங்கைக் கொடுக்கும். ஹி...ஹி...ஹி!
===============================================================================