1.'மாத்தேயு’, எத்தியோப்பியா நகரில் ஈட்டியால் குத்தப்பட்டு இறந்தார்.
2.‘மாற்கு’, அலக்சாந்திரியா பட்டணத்தில் தெருத்தெருவாக இழுத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தார்.
3.‘லூக்கா’, கிரேக்க நாட்டில் தூக்கிலிடப்பட்டார்.
4.‘யோவான்’, அகன்ற பெரிய இரும்புச் சட்டியில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெயில் வீசப்பட்டு இறந்தார்.
5.‘பெரிய யோதாபு’, எருசலேம் நகரில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
6. ‘பேதுரு’, தலைகீழாகச் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.
7.‘சின்ன யாகோபு’, ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து தள்ளியும் இறக்காததால் தடியால் அடித்துச் சாகடிக்கப்பட்டார்.
8.‘பற்தலோமேபு’, உயிரோடு தோல் உரித்துப் படுகொலை செய்யப்பட்டார்.
9.‘அந்திரேயா’, சிலுவையில் கட்டப்பட்ட நிலையில், தொடர்ந்து பிரசங்கம் செய்ய வைத்துக் கொல்லப்பட்டார்.
10.‘தோமா’ என்ற தோமஸ் ஈட்டியால் குத்தப்பட்டு மரணத்தைத் தழுவினார்.
11.‘யூதா’, அம்புகள் எய்யப்பட்டு இறந்தார்.
12.‘பர்னபா சலோனிக்கே’, யூதர்களால் கல்லால் அடிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார்.
13.‘பவு’, நீரோ என்னும் ரோமப் பேரரசனால் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
[’பொன்னீலன் [கேள்வி]பதில்கள்’, தாமரை மாத இதழ், நவம்பர், 1999]
சித்தரவதை செய்து ஆளைத் தீர்த்துக்கட்டுவதில் யூதர்களையும் மிஞ்சியிருக்கிறார்கள் நம்மவர்கள்.
*ஒரு போலீஸ் அதிகாரி, பெண்கள் விசயத்தில் ‘புகுந்து’ விளையாடினார் என்பதற்காக, அவரைக் கட்டிப் போட்டு, “இதை வைத்துக்கொண்டுதானே விளையாடினாய்?!’ என்று குரூரமாய்ச் சிரித்து, இடைவெளி விட்டுப் பலமுறை சுயஇன்பம் செய்ய வைத்து, துண்டித்து, துண்டித்ததை அவரின் வாயில் திணித்துச் சாலையோரம் வீசினார்கள் உள்ளூர் வாசிகள். மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மலை மாவட்டத்தில் இடம்பெற்ற கோர நிகழ்ச்சி இது[இது, அப்போதைய நாளிதழ்ச் செய்தி. இப்போது ஆதாரம் ஏதும் இல்லை].
*துரோகம் செய்த பெண்டாட்டியின் பிறப்புறுப்பில் பழுக்கக் காய்ச்சிய...[ஐயோ...இதற்கு மேல் வேண்டாமே].
*எதிராளியின் விரைகளைக் கசக்கிக் கூழாக்கிக் கொல்லும் கொடூரம்.
*உயிரோடு பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவது.
*உயிரோடு தோலுரிப்பதும் இங்கு நடந்திருக்கிறது[நாயக்கர் ஆட்சிக் காலத்தில், போரில் தோற்ற மன்னர்களை, உயிரோடு தோலுரித்து, கோட்டையின் வாயிலில் தொங்கவிட்டதற்கெல்லாம் சரித்திரச் சான்றுகள் உள்ளன
*ஊரார் முன்னிலையில், எதிராளியைக் கட்டிப்போட்டு, அவன் கண் முன்னாலேயே அவனின் குடும்பப் பெண்களைச் சமூக விரோதிகளால் மானபங்கப்படுத்துவது[இதுவும் வரலாற்று நிகழ்வே].
*உயிரோடு கழுவேற்றுதல் தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது. பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் ஆயிரக்கணக்கான சமண மதத்தவர் கழுவேற்றப்பட்டார்கள்[கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை முறையாகும். கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றுவர்.[1] அதற்குமுன் கழுமரத்தில் எண்ணெய் தடவி கழுவேற்றப்படுபவனைப் பிடித்து நிர்வாணமாக்கி, அவனைக் குண்டுகட்டாகத் தூக்கி ஆசனவாயைக் கழுமுனையில் வைத்து அப்படியே செருகி விடுவார்கள். உடலின் எடையால், எண்ணை தடவிய கூர்மையில் உடல் மெதுவாகக் கீழே இறங்கும். கழு மெதுவாக உடலைத் துளைத்துக்கொண்டு மேலேறும். கொஞ்சம் கொஞ்சமாக மரம் உடலினுள்ளேற ஏற வலி தாங்காமல் அவன் இரவெல்லாம் கூப்பாடு போட்டு மடிந்து போவான் -விக்கிப்பீடியா].

*அடித்தோ, தலையணையை முகத்தில் அமுக்கி மூச்சுத் திணற வைத்தோ, கழுத்தை நெறித்தோ, விஷம் வைத்தோ சாகடிப்பது எல்லாம் ஜுஜுபி.
ஆக, எதிரிகளையும் தமக்கு வேண்டாதவர்களையும் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கிக் கொலை செய்வதை ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறது மனிதகுலம்!
திருந்துவது எப்போது?!
========================================================================
========================================================================