பக்கங்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2020

பெண்களின் பலவீனமும் அதிகரிக்கும் ஆண்களின் வன்புணர்ச்சி வெறியும்!!!

உலக அளவில் அதிகக் கற்பழிப்புச் சம்பவங்களும், முறைகேடான பாலியல் குற்றங்களும் பெருகிவரும்  10 முன்னணி நாடுகளில் நம் புண்ணிய பாரதமும்[5ஆம் இடம்] ஒன்று. காஷ்மீர் முதல் குமரிவரை இக்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இந்த நாட்டில், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன.

2014 முதல் 2016 வரை இக்குற்ற நிசழ்வுகள் உச்சத்தில் இருந்ததாகத் தெரிகிறது. அந்தக் காலக்கட்டத்தில் குற்றங்களின் எண்ணிக்கை 4,00,000ஐத் தொட்டிருக்கிறது.

மாநில வாரியாகப் பார்க்கும்போது மத்தியப் பிரதேசம் முன்னிலையில் உள்ளது. மத்தியப் பிரதேசம் (3,285), ராஜஸ்தான் (3,285), மகாராஷ்ட்ரா (3,063), உத்திரப் பிரதேசம் (3,050)  என்றிவ்வாறு கற்பழிப்பு நிகழ்வுகள் இம்மாநிலங்கள்களில் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் நகரங்களிலேயே அதிக அளவில் கற்பழிப்புகள் நடக்கின்றன. புது டெல்லி (1,636), மும்பை (391), ஜெய்ப்பூர் (192), புனே (171) ஆகியவை அதிகமாகக் கற்பழிப்பு நடந்த நகரங்களாக உள்ளன.

நம் நாட்டில், தினமும் சராசரியாக 93 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்[முன்னேற்றம்தான்]. குற்றம் புரிபவர்கள் பெரும்பாலும் அவர்களுக்குத் தெரிவ்தவர்கள்தானாம். இதில் உறவினர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் உள்ளடக்கம் என்பது பேரதிர்ச்சி தரும் செய்தி.

குற்றங்களில் 54% காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படுவதில்லை என்பது கொடுமையிலும் கொடுமை. இந்தக் கணிப்பு தவறானது. உண்மையில் 90% பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்குத் தொடுப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து[04 ஆம் இடம்], அமெரிக்கா[03], ஸ்வீடன்[02], தென்னாப்பிரிக்கா[01] ஆகியவை இது விசயத்தில் நம்மைக் காட்டிலும் முன்னேறிய நாடுகள் ஆகும்.

தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வழக்குகள் பதிவாகின்றனவாம். பதிவானவற்றைக் காட்டிலும் 8 மடங்கு அதிகக் குற்றங்கள் நடந்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஒரு கோடி மட்டுமே மக்கள் தொகை கொண்ட ஸ்வீடன் நாட்டில், நான்குக்கு ஒன்று என்ற அளவில் பெண்கள் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள்.

அமெரிக்காவில் கல்லூரிப் பெண்கள் அதிக அளவில் காமுகர்களால் வன்புணர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு ஆண்பிள்ளைகளையும் அவர்கள் விட்டுவைப்பதில்லையாம்.

பொதுவாக, 18 முதல் 24 வயதுடைய பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மூன்றில் ஒருவர் வாழ்நாளில் ஒருமுறையாவது வன்கொடுமை செய்யப்படுகிறார்.

உலக அளவிலான குற்றங்களில், ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் 16.04 சதவீதத்தைப் பகிர்ந்துகொள்கின்றன.

இங்கிலாந்து நாட்டுக் காமுகர்களிடையே, சிறுமிகளைப் போதைக்குள்ளாக்கிப் புணரும் போக்கு அதிக அளவில் உள்ளது என்கிறது புள்ளிவிவரம்.

நான்கு கனடா நாட்டுப் பெண்களில் ஒருவர் வாழ்நாளில் ஒரு முறையாவது வன்புணர்வுக்கு ஆளாகிறார்.

ஜிம்பாப்வேயில் சிறுமிகளைக் கற்பழிப்பது மிக அதிகம் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இங்கு 90 நிமிடத்திற்கு ஒரு பெண் பாதிக்கப்படுகிறார்.

விரிவஞ்சி இத்துடன் பதிவு நிறைவு செய்யப்படுகிறது.

முத்தாய்ப்பாக, நான் சொல்ல விழைவது ஒன்றுண்டு.

கடவுள் என்று ஒருவன் இருந்தால்.....

மனித இனத்துப் பெண்களை மிகப் பலவீனமாகப் படைத்தது அவன் செய்த மாபெரும் குற்றங்களுள் ஒன்று!
===============================================================