அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 15 செப்டம்பர், 2020

"இந்தியைத் திணிக்காதே"... கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கடும் எச்சரிக்கை!!!

தமிழ்நாடு தவிர மற்ற மாநிலத்தவர் இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துவதில்லை என்னும் வருத்தம் நம்மவர்களுக்கு உண்டு. அவ்வருத்தத்தைப் போக்கும் வகையில் உள்ளது கர்நாடகா 'ஜனதா தளம்[சமயக் சார்பற்ற] கட்சித் தலைவர் குமாரசாமி அவர்களின் 'டிவிட்டர்' பதிவு. அதை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறது'மாலைமலர்'[15.09.2020]. https://www.maalaimalar.com/news/national/2020/09/15080008/1887421/Kumaraswamy-trilingual-policy-only-in-nonHindi-speaking.vpf 

செய்தி:

#நாட்டில் பல்வேறு மொழிகள், கலாசாரங்களை உள்ளடக்கிய இந்தியாவில் கன்னடம் உள்பட பிற மொழிகள் மீது இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் முயற்சி நடந்து வருகிறது. இன்று (அதாவது நேற்று) கொண்டாடிய இந்தி தின விழாகூட அத்தகைய நோக்கம் கொண்டதுதான். மொழி ஆணவத்துடன் கொண்டாடப்படும் இந்தி தின விழாவுக்குக் கன்னடர்களின் எதிர்ப்பு உள்ளது. இந்தி தேசிய மொழி அல்ல. அத்தகைய ஒரு அம்சம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.

ஆயினும் இந்தி தேசிய மொழி என்று முன்னிறுத்தும் முயற்சி முன்பு இருந்தே தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அது தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் பிற மொழியினர் கிளர்ந்து எழுவதற்கு முன்பு இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும். இந்தியைக் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் மொழிகளைத் தேர்ந்தெடுத்துக் கற்கலாம். ஆனால் ஒரு மொழியைத் திணித்துக் கற்றுக்கொள்ளக் கட்டாயப்படுத்தினால் அது சாத்தியமில்லை.

நாட்டின் ஒற்றுமை, கலாசாரத்திற்குப் பங்கம் ஏற்படுத்தக்கூடாது. இந்தி தின விழா கொண்டாடுவதை ரத்து செய்ய வேண்டும். அல்லது, இந்தி தின விழா கொண்டாடுவது போல், கன்னடம் உள்பட பிற மொழிகளின் தின விழாவையும் கொண்டாட வேண்டும். நவம்பர் 1ஆம் தேதியைக் கன்னட தினமாகக் கொண்டாட வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தில் 343, 344, 345 ஆகிய பிரிவுகளில் இந்திக்கு ஊக்கம் அளிக்கும் குழப்பமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசியல் அமைப்புச் சட்டத்தில் அடிக்கடி திருத்தங்களைக் செய்துவரும் பா.ஜனதா, இதையும் மாற்ற வேண்டும். இதன் மூலம் கன்னடம் உள்பட பிற மொழிகளைப் பாதுகாக்க வேண்டும். இந்தி விழாவைப் போல் மும்மொழிக் கொள்கையை முன்னிறுத்தும், தேசியக் கல்வி கொள்கையிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சி இடம் பெற்றுள்ளது. இருமொழிக் கொள்கை இருந்தால் என்ன பிரச்சினை? இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறதா?

இந்தி பேசாத மாநிலங்களில் மட்டும் ஏன் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. சமீபகாலமாக இந்தி மொழி, சித்தாந்த ரீதியாக மாற்றப்பட்டு வருகிறது. தேசிய வாதம், தேசபக்தி, இந்துத்துவா ஆகியவற்றுடன் இந்தி மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சி மிகப்பெரிய தேசத்துரோகம். பல்வேறு மொழி பேசும் நமது நாட்டில், இந்தி மூலம் தேசபக்தியை ஏற்படுத்த முயற்சி செய்வது சரியல்ல. இது ஒற்றுமைக்கு விடப்பட்ட சவால்.

தென்இந்தியாவில் உள்ள மாநிலங்களில் கர்நாடகத்தில் இந்தியை எளிதாகப் புகுத்திவிடலாம் என்று சிலர் திட்டமிட்டு உள்ளனர். இதற்குக் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் நடந்து கொள்ளும் விதமும் ஒரு காரணமாக இருக்கலாம். கன்னடர்கள் நல்லிணக்கக் குணம் கொண்டவர்கள். அதைப் பலவீனம் என்று கருத வேண்டாம். கன்னடர்களுக்கு இன்னொரு குணம் உள்ளது. அது வெடித்தால் என்ன ஆகும் தெரியுமா?#

===============================================================