அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 16 செப்டம்பர், 2020

தமிழுக்குப் பெருமை சேர்க்கும் 'காமன்வெல்த்' அறக்கட்டளை!

#காமன்வெல்த் அறக்கட்டளை எனும் அமைப்பு காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியினை 2012 -ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் 2021 - ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டி அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

காமன்வெல்த் நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியா, கனடா மற்றும் ஐரோப்பா, கரீபியன், பசிபிக் என்று ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மண்டலத்தில், 19 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும், ஆசிய மண்டலத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளும், கனடா மற்றும் ஐரோப்பா மண்டலத்தில் 4 நாடுகளும், 2 பெருங்கடல் பிரதேசங்களும், கரீபியன் மண்டலத்தில் 12 நாடுகளும், 6 பெருங்கடல் பிரதேசங்களும், பசிபிக் மண்டலத்தில் 11 நாடுகளும், 3 பெருங்கடல் பிரதேசங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இச்சிறுகதைப் போட்டிக்கு ஆங்கிலம், வங்காளம், சீனம், பிரெஞ்ச், கிரேக்கம், கிஸ்வாகிலி, மலாய், போர்த்துக்கீசு, சமோவன், தமிழ், துருக்கீஷ் ஆகிய 11 மொழிகளில் எழுதிச் சமர்ப்பிக்க முடியும். இவை தவிர, காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த எந்த ஒரு மொழியிலான சிறுகதையினையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்தும் சமர்ப்பிக்கலாம்.#

இது 'தினமணி'யில்[14.09.2020]  வெளியான செய்தி.

போட்டிக்கான சிறுகதைகளை எழுதி அனுப்புவதற்கான 11 மொழிகளில் ஒன்றாகத் தமிழும் இடம்பெற்றுள்ளமை, அறிந்து மகிழத்தக்கது.

இந்திய மொழிகளில் தமிழும் வங்காளமும் மட்டுமே போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை எண்ணி நாம் பெருமிதப்படலாம்.

அதே வேளையில்.....

காமன்வெல்த் அறக்கட்டளையின் நம் மொழியின் மீதான மதிப்பு இனியும் குறைந்துவிடாமல் காப்பது, கதை எழுதுவதில் ஈடுபாடுள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் உள்ள கடமையாகும்.

பலனை எதிர்பார்க்காமல், பெருமளவிலான படைப்புகளை உரிய காலக்கெடுவுக்குள் தவறாமலும் மறவாமலும் அனுப்பிவைத்தல் வேண்டும்.

சிறுகதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர்கள் தரமான கதைகளை அனுப்புவது வரவேற்கத்தக்கது.

முக்கிய விதிகள்:

*ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம்.

*படைப்பு சொந்தமானதாக இருப்பது மிக அவசியம். வேறு இதழ்களிலோ இணையத் தளங்களிலோ வெளியானதாக இருத்தல் கூடாது.

*போட்டிக்கான சிறுகதைகள் மண்டல வாரியாகப் பரிசீலிக்கப்பட்டு ஐந்து மண்டலங்களுக்கும் தனித்தனியாகப் பரிசுக்குரிய ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்படும். இந்த ஐந்து கதைகளிலிருந்து ஒட்டு மொத்த பரிசுக்குரிய கதையாக ஒரு கதை தேர்வு செய்யப்பட்டு, அக்கதைக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்படும். மற்ற நான்கு கதைகளுக்கும் ரூ.2,500 வீதம் பரிசுத்தொகை வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று அறிந்துகொள்ளுங்கள்.

===============================================================