தன்னுடைய அடுத்த பிறந்தநாளைக் "கோட்டையில் கொண்டாடுவோம்" என அரசியல்வாதி கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதை ஊடகங்கள் வாயிலாக அறிந்திட நேர்ந்தது [https://tamil.oneindia.com/news/chennai/kamal-haasan-says-next-birthday-will-be-celebrated-in-st-george-fort-402682.html Monday, November 9, 2020, 18:09 [IST]
அவர், தன்னுடைய டிவிட்டர் செய்தியில்.....
'என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள உள்ளும் புறமும் சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, விஜய் பிறந்தநாள் தினத்தன்று, ஊத்தங்கரைப் பேரூராட்சி அலுவலகத்தில் பேணர் கட்டி, கேக் வெட்டி அலப்பறையாகக் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேலும் கொரோனா காலம் என்பதால் நடிகர் விஜய் பெயரைச் சொல்லி, பொது மக்களுக்கு முகக் கவசங்களும் விநியோகிக்கப்பட்டது.
இந்தக் கொண்டாட்டங்களை முன்னெடுத்ததோடு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்து அதை இணையத்தில் பரப்பி உள்ளார். இந்த வீடியோ கிருஷ்ணகிரி மாவட்ட வாட்ஸ் ஆப் குழுக்களில் வைரலாகப் பரவியுள்ளது.
இதையடுத்து, பேரூராட்சிச் செயல் அலுவலர் ராஜாவைப் பணியிட நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
இதன் வாயிலாக, அரசு விதிமுறையின்படி, அரசு அலுவலகங்களில் அலுவலர்களோ, தனி நபரோ, அரசியல் கட்சியினரோ பிறந்தநாள் கொண்டாடுவது குற்றம் என்பது அறியத்தக்கது.
* * *
மத்தியப் பிரதேசம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஓர் அரசு அலுவலகத்தில் நேற்று ஒரு ஊழியருக்குப் பிறந்தநாள் என்பதால் கேக் வெட்டிக் கொண்டாடினர். தொடர்ந்து அங்குள்ள அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது கதவைப் பூட்டிவிட்டு உள்ளே குத்தாட்டம் போட்டுள்ளனர். 'பத்மாவத்' படத்தின் 'கூமர்' உள்பட பல்வேறு இந்திப் பாடல்களுக்கு அவர்கள் டான்ஸ் ஆடியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்தச் செய்தி அறிந்த தேவாஸ் மாவட்ட ஆட்சியர், சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.