அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 13 நவம்பர், 2020

கொரோனா தடுப்பில் மூச்சுப் பயிற்சியின் முக்கியப் பங்கு!

உலகம் முழுவதும் கொரோனாவினால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் கிருமியால் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும் மூச்சுப் பயிற்சி பெரிதும் உதவுகிறது என்பதை அறிந்திருப்பீர்கள். இதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு ஊடகங்களில் இடம்பெற்ற தகவல்களைத் திரட்டிப் பதிவு செய்திருக்கிறேன்.

                                *                    *                  *                    *

ம்மைக் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சித்தர்கள் கையாண்ட பயிற்சியைத் தொடர்ந்து செய்தால் போதும். அது தான் மூச்சு பயிற்சி. சரியான மூச்சுப்பயிற்சி, கோவிட்-19 (Covid-19)  என்னும் பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு மிகச் சிறந்த ஆற்றல் மிக்கக் கேடயமாக விளங்குகிறது.

நாம் சாதாரணமான முறையில் சுவாசிக்கும்போது குறைந்த அளவிலான ஆக்ஸிஜன்தான்  நுரையீரலை அடைகிறது. முறையான  பயிற்சி மேற்கொள்வதால்  நுரையீரலுக்கு அதிக அளவில் உயிர்க்காற்று, அதாவது பிராணவாயு  கிடைக்கும். இதனால் நுரையீரல் பலம் அடைகிறது. கொரோனா என்பது, நமது நுரையீரலைத் தாக்கும்போதுதான் அதிகப் பாதிப்பு ஏற்படுகிறது. நமது நுரையீரல் வலுவாக இருந்தால் கொரோனாவை எளிதாக வென்று விடலாம்.

இடது மூக்குத் துவாரத்தின் வழியாக  மூச்சை உள்ளிழுத்து, வலது மூக்குத் துவாரத்தின் வழியாக  வெளிவிடுவது எளிய மூச்சு பயிற்சி ஆகும்[இடது வலது துவாரம் என்றில்லாமல், மூச்சை நன்கு இழுத்து, சிறிது நேரம் நிறுத்தி வெளியிடுதல்கூடப் போதுமானதே]. யோகாவில், இந்த நமது இடது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து, பின்னர் அதனை வெளிவிடுவது இடகலை என்று கூறப்படுகிறது. வலது மூக்குத் துவாரத்தின் வழியே மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுவது பிங்கலை என்று கூறப்படுகிறது.

மூச்சுப் பயிற்சி செய்யும்போது, வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என்பது முக்கியம். தினமும் ஒரே நேரத்தில் மூச்சுப் பயிற்சி செய்வது சிறந்த பலனைத் தரும்.

இந்த மூச்சுப் பயிற்சியினால், நுரையீரல் வலுவடையும் என்பதோடு, கூடுதல் பலனாக, நமது  மூளையும் புத்துணர்ச்சி பெறுகிறது. இதனால், நமது  ஞாபகச் சக்தியும் அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி  அதிகரிக்கும். கோவிட்-19 தொற்று நோயை எளிதாக விரட்டலாம்.[https://zeenews.india.com/tamil/health/breathing-exercises-tought-by-siddha-help-us-to-prevent-corona-338001]

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் குறித்த மன அழுத்தம் உண்டாகிறது. இந்த மன அழுத்தம், நுரையீரல் செயல்பாட்டைப் பாதித்து, சளி, இருமல், தும்மல் போன்ற அறிகுறிகளுடன் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கிறது.எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் சுவாச நிலையைச் சீர் செய்யவும் மூச்சுப் பயிற்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. என்கிறார் யோகா மருத்துவர் தீபா.[https://tamil.news18.com/news/tamil-nadu/yoga-and-akkupanchar-treatment-for-corona-positive-persons-skd-dha-311677.html]

 ''புகை பிடித்தால் கொரோனா வைரஸ் தீவிரமாகும். அலுவலகம் செல்வோர் மூச்சுப் பயிற்சி செய்வது அவசியம்'' என்று பொதுச் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறினார். [https://www.dinamalar.com/news_detail.asp?id=2542229]

தினமும் யோகாசனப் பயிற்சியும், மூச்சுப் பயிற்சியும் அதனுடன் இணைந்து தியானப் பயிற்சியையும் ஒருசேரச் செய்யும்போது, இயற்கையான முறையில் நம் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். அதன் காரணமாகக் கொரோனா மட்டும் அல்ல, வேறு எந்த ஒரு நோயும் வராது. இந்தப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்யும்போது இருக்கின்ற நோயும் கட்டுப்படும் அல்லது வெகு சீக்கிரத்தில் குணமாகும்.[https://www.maalaimalar.com/health/fitness/2020/06/09085356/1596621/breathing-exercise.vpf]

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள், குணமாகி மீண்டுவருவதற்கு, மூச்சுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளர்களுக்கு மூச்சுப் பயிற்சி தொடர்ந்து வழங்கப்படுகிறது.[https://m.dailyhunt.in/news/nepal/tamil/the+hindu+kamadenu-epaper-thehinta/ellai+bathukappub+badai+veerar+veeramaranam+bakisthan+attoozhiyam-newsid-n229153486]

மிழகம் முழுவதும் இயற்கை யோகா முறையில் சோதனைக்காகத் தேர்வு செய்யப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படும் பாதிக்கப்பட்ட 650 நபர்களில் ஒருவர் உமா(24). ''எனக்கும் கணவருக்கும் நோய்த் தொற்று இருந்தது. கடந்த 14 நாட்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். இயற்கை யோகா சிகிச்சையைத் தொடர்ந்து எடுக்கிறோம். மருத்துவர்கள் ஆன்லைனில் கண்காணிக்கிறார்கள். நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள பானங்களைக் குடிப்பதால் சளி மற்றும் காய்ச்சல் குறைந்துள்ளது. மூச்சுப் பயிற்சி செய்வதால் மூச்சுக் குழாயில் அடைப்புகள் இல்லை; அதனால், மூச்சு திணறல் இல்லை. உணவு முறையில் கவனம் வந்துள்ளது. நோய் எதிர்ப்புச் சக்திக்கான பானங்களைத் தயாரித்துக் குடிப்பதால் சோர்வு குறைந்துள்ளது'' என்கிறார் கொரோனா நோயிலிருந்து முற்றிலுமாய்க் குணம் பெற்ற உமா. இது பி.பி.சி. செய்தி. [https://www.bbc.com/tamil/science-53115263]

(குறைந்தபட்சம் அரை மணி நேரம் பயிற்சி செய்வது விரும்பத்தக்கது. தேவைப்பட்டால், நடுநடுவே கொஞ்ச நேரம் பயிற்சியை நிறுத்துவதில் தவறில்லை)

===============================================================