அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 14 நவம்பர், 2020

தமிழக பா.ஜ.க.வின் அடுத்த அறிவிப்பு: 'கோமாதா யாத்திரை'!!!

ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பே, அதன் தேவையை[காரியத்துக்கான காரணத்தை] நன்கு சிந்தித்து அறிதல் அவசியம். இது விசயத்தில் அரசியல் கட்சிகளுக்கான பொறுப்பு மிக மிக அதிகம்.

காரணத்தை ஆராய்ந்து அறியாமலே, திருத்தணியிலிருந்து திருச்செந்தூருக்கு  'வெற்றி வேல் யாத்திரை' செல்லவிருப்பதாக அறிவித்தனர் தமிழ்நாடு பா.ஜ.கட்சியினர்.

தமிழ்நாடு அரசு யாத்திரைக்கு[உயர் நீதிமன்ற ஆதரவுடன்]த் தடை விதிக்கவே, 'முருகனை வழிபடுவதற்குத்தான் போகிறோம்' என்று பொய் சொல்லி, ஆளாளுக்கு ஒரு வேலைத் தூக்கிக்கொண்டு யாத்திரை புறப்பட்டார்கள்; கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர், கருப்பர் கூட்டத்தினரை, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த வேல் யாத்திரை நடத்தப்படுகிறது[https://www.dinamalar.com/news_detail.asp?id=2648551] என்று யாத்திரை போவதற்குப் புதிய காரணம் சொன்னார்கள்.

யாத்திரை புறப்பட்டார்கள்; மீண்டும் கைது செய்யப்பட்டார்கள்[வழக்கம்போல் விடுதலையும் செய்யப்பட்டார்கள்].

இப்போது, 'கொரோனா முன்பணியாளர்களைப் பாராட்டவும், மத்திய அரசின் திட்டங்கள் பற்றிப் பேசவும்' யாத்திரை போகிறோம்' என்று வேறு இரண்டு காரணங்களை அறிவித்திருக்கிறார்கள்[ஊடகச் செய்தி].

[அடுத்ததாக, கோமாதா, புண்ணிய பாரதத்தின் வழிபடு தெய்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த யாத்திரை என்று சொல்வார்களோ என்னவோ?!]

இவர்களின் யாத்திரையால் பயன் விளையுமா என்பது கேள்விக்குரியதாக இருக்க, தங்களின் யாத்திரைக்குத் திட்டவட்டமாக ஒரு காரணத்தை அல்லது, காரணங்களை முதலிலேயே அறிவிக்காமல், மேற்கண்டவகையில் மக்களைக் குழப்புவது, சிந்தித்துத் திட்டமிடலுக்கான குறைந்தபட்சப் பொறுமைகூட[வேறு எப்படிச் சொல்லலாம்?] இவர்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

தமிழரைப் பிற இனத்தவர் எள்ளி நகையாடுவதற்கும் இவர்களின் இந்நிலைப்பாடு வழிவகுக்கிறது.

இவர்களின் 'வெற்றி வேல் யாத்திரை' குறித்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, 'வேல் யாத்திரை வேண்டாம்! கொரோனா யாத்திரை போங்கப்பா!!'[https://kadavulinkadavul.blogspot.com/2020/11/blog-post_5.html] என்று தலைப்பிட்டு நான் பதிவு எழுதியது உங்களுக்கு நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.

என்னைப் போலவே வேறு யாரேனும்கூட இந்தவொரு யோசனையை இவர்களுக்கு வழங்கியிருக்கக்கூடும் என்று நம்புகிறேன்.

===============================================================