பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, வேல்யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று காலையில், காரில் கடலூருக்குப் புறப்பட்டார் என்பது ஊடகச் செய்தி.
காரை எப்போதும் ஓட்டும் ஓட்டுநரே ஓட்டிச் சென்றிருக்கிறார். சென்னையின் போக்குவரத்து நெரிசலால் புறநகரைச் சென்றடையும்வரை ஊர்ந்து ஊர்ந்து சென்ற குஷ்பு கார், நகருக்கு வெளியே சென்றதும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. சுமார் 100 கி.மீ. வேகத்தில் குஷ்புவின் கார் கடலூரை நோக்கிச் சீறிக்கொண்டிருந்த நிலையில்.....
மதுராந்தகம் அருகே அய்யனார் கோயில் உள்ள இடத்தைக் கடந்தபோது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் பக்கவாட்டில் மோதியுள்ளது[லாரியை அணைத்திருக்கிறது கார்]. இதில் காரின் பின்பக்கக் கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளது. குஷ்பு உள்ளிட்ட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
குஷ்புவுக்குக் கார் விபத்து என்ற செய்தி வெளியாகி, பெரும் பரபரப்பை உண்டாக்கியது. தற்போது கார் விபத்து தொடர்பாகக் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"மேல்மருவத்தூர் அருகே ஒரு கன்டெய்னர் லாரி எங்கள் கார் மீது மோதியது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்தாலும், இறையருளாலும் நான் பத்திரமாக உள்ளேன். கடலூர் வேல் யாத்திரைக்கான பயணம் தொடர்கிறது. காவல்துறையினர் விசாரிக்கின்றனர். முருகக் கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார். என் கணவர் முருக பக்தர். அவர் நம்பிக்கையின் பலனை நான் இன்று கண்டுகொண்டேன்."
"கடவுள் நம்பிக்கை கொண்டவளாக இருந்த நான், கும்பகோணம் தீ விபத்தில் 100 குழந்தைகள் இறந்தபோது கடவுள் நம்பிக்கை இல்லாதவள் ஆனேன்"[https://cinema.dinamalar.com/tamil-news/92669/cinema/Kollywood/Diwali---Kushbhu-special-interview.htm] என்று சொன்ன இந்த நடிகைதான், இறையருளை நினைந்து இவ்வாறு உருகியிருக்கிறார்.
[[[இவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவரென அறியப்பட்டார் என்பதற்கான இன்னொரு ஆதாரம்: '.....இவர் மும்பையில் மேற்கு அந்தேரியில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். 1980களில் குழந்தை நட்சத்திரமாகத் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் ஒரு கடின உழைப்பாளி, பகுத்தறிவாளர். இவர் தன்னை ஒரு நாத்திகர் என்று அழைத்துக்கொண்டாலும் கடவுள் நம்பிக்கை அல்லது தெய்வ நம்பிக்கைகளுக்கு எதிராக எந்தவிதமான கடும் செயலையும் வெளிப்படுத்தவில்லை.....' https://tamil.indianexpress.com/explained/why-did-khushbu-sundar-join-bjp-from-congress-226363/]]]
அப்புறம், தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருப்பது நினைவு வந்ததாலோ என்னவோ, முருக பக்தரான தன் கணவருக்குள்ள நம்பிக்கையின் பலன் என்று சொல்லி முரண்படுகிறார். இவர் ஒரு போலி நாத்திகை[நாத்திகர்] என்பதால் நேர்ந்தது இந்த முரண்பாடு.
"குஷ்பு அம்மா, நடிகையான நீங்கள் இனியும் அரசியல்வாதியாகவும் நீடிக்கலாம்; பிரச்சினை இல்லை. ஆனால் அன்புகொண்டு, 'நான் நாத்திகவாதி' என்று மட்டும் சொல்ல வேண்டாம். அதற்கு அதிதீவிரச் சிந்தனை தேவை." -இது நம் வேண்டுகோள்.
நடிகை குஷ்பு குறித்து விலாவாரியாக எழுதித் தள்ளிய ஊடகக்காரர்கள், ஒரு கொசுறுத் தகவல் போல, லாரி ஓட்டுநர் அப்துல் ஹக்கீம் கைது செய்யப்பட்டதையும் செய்தியாக்கியிருக்கிறார்கள்.
நடந்த விபத்து குறித்து எந்தவொரு ஊடக நிருபரும் அவரிடம் விசாரிக்கவே இல்லை. விசாரிக்காமலே, 'அப்துல் ஹக்கீம், லாரியை ஏற்றிக் குஷ்புவைக் கொல்லப் பார்த்தாரா?'[குஷ்புவும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்கிறார்] என்று கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தி போட்டிருக்கிறான் Asianet Newsகாரன். 100கி.மீ.வேகத்தில் முந்தும் காரை மெல்லச் செல்லும் லாரி எப்படி மோதித்தள்ள முடியும் என்பது பற்றி யோசிக்கும் அறிவு இவனுகளுக்கு இல்லை.
விபத்து நடந்த சில மணி நேரத்தில் தினத்தந்தி, மாலைமலர், தினமலர், தினமணி, இந்து தமிழ், பாலிமர், ஒன் இண்டியா, புதிய தலைமுறை என்று அத்தனை ஊடகக்காரர்களும் அதிரடியாய்ச் செய்தி வெளியிட்டு, குஷ்பு மீதான தங்களின் அளப்பரிய அபிமானத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏழை எளிய மக்கள் குறித்தான அவல நிகழ்வுகளுக்கு இவர்கள் இத்தனை முக்கியத்துவம் தருவதில்லை!
தமிழ் ஊடகங்களின் யோக்கியதை இதுதான்!
செய்தியுடன் குஷ்புவின் அழகான படத்தையும் இவர்களில் சிலர் வெளியிடத் தவறவில்லை.
படம் போட்டால்தான் பத்திரிகையின் விற்பனை கூடுமோ!?!?
https://www.dinamalar.com/news_detail.asp?id=2654573
https://www.maalaimalar.com/news/district/2020/11/18100341/2082353/Tamil-News-Kushboo-car-Accident-in-Maduranthakam.vpf
https://tamil.oneindia.com/news/chennai/how-khushbu-got-into-car-accident/articlecontent-pf501315-403412.html
https://www.hindutamil.in/news/tamilnadu/602703-kushboo-tweet-about-accident-.