அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 14 டிசம்பர், 2020

'அந்த' ஆசையைக் கட்டுப்படுத்தினால் ஆயுள் குறையுமா?!


மேற்கண்ட கேள்விக்குப் பிரபல பாலியல் மருத்துவர் நாராயண  ரெட்டி தரும் பதில் "ஆம்" என்பதே.

தமது பாலியல் இச்சையைத் தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறக்கின்றன என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்களாம்.

பாலியல் இச்சை தூண்டப்பட்டு, ஆனால் பாலியல் கலவியில் ஈடுபடமுடியாமல்போன ஆண் ஈக்களின் ஆயுள்காலம் 40 சதவீதம் குறைவதாக மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாம். ஜர்னல் ஆப் சயன்ஸ் என்கிற விஞ்ஞான இதழ் இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. 

சாதாரணமாக, வீடுகளில் காணப்படும் வீட்டு ஈக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்போது, விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களைச் செயற்கையாக ஆண் ஈக்கள் மத்தியில் பரவச்செய்தனர். அந்த ஹார்மோன்களால் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் கலவிக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாமையால் அவற்றால் கலவியில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகரித்ததையும் இந்த ஆய்வாளர்கள் அதற்கான பரிசோதனைகளின் மூலம் கண்டறிந்தனர்.

இப்படித் தொடர்ந்து மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், கலவியில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிடவும் குறைவான ஆயுளில் இறந்து போயின.

இதில் கலவியில் ஈடுபட்ட சாதாரண ஆண் ஈக்களுடன் ஒப்பிடும்போது, கலவியில் ஈடுபட அனுமதிக்கப்படாத ஆண் ஈக்களின் ஆயுட்காலம் சுமார் 40 சதவீதம் குறைவதைக் கவனித்த இந்த ஆய்வாளர்கள், ஆண் ஈக்களின் ஆரோக்கியமான நீடித்த ஆயுளுக்கும் அவற்றின் பாலியல் திருப்திக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

செக்ஸில் ஈடுபடாத ஆண் ஈக்களின் ஆயுள் குறைவதாகக் கூறும் ஆய்வின் முடிவு மனித இன ஆண்களுக்கும் பொருந்தும்.

ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட்ட வேறொரு ஆய்விலும், அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் பாலியல் செயற்பாட்டு திருப்திக்கும் தொடர்பு இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்திருக்கிறாரகள்.

இந்த இரு ஆய்வு முடிவுகளும் ஒரு சேரப் பார்க்கப்படவேண்டும் என்று கூறும் விஞ்ஞானிகள், மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகளின் ஆரோக்கியத்திலும் ஆயுளிலும் அவற்றின் பாலியல் செயற்பாடும், அதில் அவற்றுக்குக் கிடைக்கும் நிறைவும் நேரடியான பங்கு வகிக்கின்றன என்பதை இந்த ஆய்வுகள் மீண்டும் உறுதி செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேசமயம், ஆண் ஈக்களின் ஆயுளைப் பாதிக்கும் இந்தப் பாலியல் கலவியால் கிடைக்கும் திருப்தி என்பது மனிதர்களுக்கும் அப்படியே பொருந்தும் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார் சென்னையிலுள்ள பிரபல பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.

ஆரோக்கியமான பாலியல் உறவும், அதன் மூலம் ஆண்களுக்குக் கிடைக்கும் உடல்ரீதியான மற்றும் உளரீதியிலான திருப்தியும் சேர்ந்து ஆண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும், அது அவர்களின் ஆயுளை நீட்டிப்பதாகவும், இதற்கான மருத்துவக் காரணிகள் அறிவியல் ரீதியிலான ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் உறுதிபடக் கூறியிருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.

*முக்கியக் குறிப்பு:
கலவிக்கு வழியே இல்லேன்னா, அவசியம் கட்டுப்படுத்தியே ஆகணும்[ஆயுள் குறைஞ்சா பரவாயில்லை]. தவறான வழியில் போனா உடம்பு கெடும்; தப்புப் பண்ணி மாட்டிகிட்டா பேரும் கெட்டுடும்! 
ஹி...ஹி...ஹி!!!

===============================================================

https://www.bbc.com/tamil/science/2013/12/131210_weeklysciencedec102013