அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

நாத்திக 'நன்மொழி'கள்!!!

#மயிரை(முடி) மட்டும் கடவுளுக்குக் காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?

#எல்லாம் அறிந்த கடவுளுக்குத் தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்ன வேலை?

#பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?

#சாமிக்கு அலகு குத்தி நிவர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஏன் எந்த எலும்பும் இல்லாத கன்னத்தின் பகுதியில் குத்துகின்றனர்? கொஞ்சம் பின்னே தள்ளி காதுக்குக் கீழே குத்திக்கொள்ளலாமே? அப்படிக் குத்தினால் உயிர் போய்விடும் என்று தெரிந்துதானே செய்வதில்லை. கன்னத்தில் அலகு குத்துவதுபோல் கழுத்திலும் குத்திக்கொள்ள துணிச்சலுண்டா?

#தீ மிதிக்கும் திருவிழாவில் எரிந்த நெருப்புத்துண்டுகளில் நடந்து போகும் பக்தர்கள் நெருப்பில் காய்ச்சிய கம்பிகளை வைத்தால் மிதித்து நடப்பார்களா? நெருப்பை மூட்டியதும் எரிகின்ற நெருப்பில் நடந்து செல்வார்களா? முடியாது! ஏன்? இதை அறிவியல் தெளிவாக விளக்குகின்றது. விறகடுப்பில் இருந்து விழும் நெருப்புத்துண்டுகளைக் கையாலேயே எடுத்து உள்ளே போட முடியும். ஆனால், அடுப்பில் கொதிக்கும் பாத்திரத்தின் மூடியைத் தொடக்கூட முடியாது. துணியை வைத்துத்தான் எடுக்க முடியும். நெருப்புத்துண்டைச் சுற்றி உருவாகிக்கொண்டிருக்கும் நீறு வெப்பத்தைக் கடத்தாது. அதனால் அதைத் துரிதமாக எடுத்து உள்ளே போட்டுவிட முடிகிறது. நெருப்பால் உருவாகும் வெப்பத்தைப் பாத்திரம் எளிதாகக் கடத்துகிறது. அதனால் அதைத் தொட்டால் சுட்டுவிடுகிறது.

#கடவுளை வணங்கினால் பாவங்களை மன்னிப்பார் என்றால் நாம் பாவம் செய்யும்போது தடுக்காமல் செய்யவிட்டுவிட்டு ஏன் மன்னிப்புக் கேட்க வைத்து மன்னிக்க வேண்டும்?

#மனிதனைப் படைத்த கடவுள் பாவம் செய்யும் மனநிலையை அவன் சிந்தனையில் ஏன் செலுத்தவேண்டும்?

குறிப்பு: இவை போன்ற நன்மொழிகள் இன்னும் நிறையவே உள்ளன. பக்தகோடிகளின் மனங்களைப் பெரிதும் புண்படுத்த வேண்டாம் என்பதால் அவை தவிர்க்கப்பட்டன.

===============================================================

http://www.minnalparithi.com/2020/08/blog-post.html