திங்கள், 11 ஜனவரி, 2021

பக்தி வலை!!!

சாமிகளின் பெயரால், கோடிக்கணக்கில் சொத்துச் சம்பாதித்துச் சொகுசாக வாழும் சாதுக்கள், சாமியார்கள் எனப்படுபவர்களின் கடந்த காலத்தை ஆராய்ந்தால், அவர்களில் மிக மிகப் பெரும்பாலோர் பிறரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தவர்கள் என்பதை அறியலாம்.

வசதியாக வாழ்வது மட்டுமல்ல, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கனத்த சோகம் சுமந்து தம்மைத் தேடிவரும் வரும் இளம் பெண்களின் கற்பைச் சூறையாடுவதை  இந்தச் சாமியார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். என்பதற்கு அடிக்கடி, சாமியார்கள் நிர்வகிக்கும் கோயில்களில் இடம்பெறும் கற்பழிப்பு நிகழ்வுகளே சான்றாக உள்ளன.

செத்தொழிந்த சாமியார்கள் மட்டுமல்ல, இன்று உயிரோடிருக்கும் பல சாமியார்களின் அந்தரங்கங்கள்... அவர்கள் செய்யும் அட்டூழியங்கள்... லீலைகள் பற்றியெல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்தே இருக்கும்

உத்தரப்பிரதேசத்தில் சத்தியநாராயணா என்றொரு சாமியார். அவன் செய்த அட்டூழியம் குறித்து நாளிதழ்கள்[https://www.hindutamil.in/news/] செய்தி வெளியிட்டுள்ளன. 

சுமார் ஏழு வருடங்களுக்கு முன் உத்தரப்பிரதேசம் பதாயுவின் கிராமத்திற்குச் சாது சத்யநாராயணா வந்துள்ளான். அங்கு பாழடைந்து இருந்த சிவன் கோயிலைப் புனரமைத்தான். இதுதான் அவன் கன்னிப் பெண்களைச் சிக்க வைப்பதற்கான கண்ணி[வலை].

அவன் வகுத்த திட்டத்தின்படி, கோயில் அருகிலேயே தனது ஆசிரமத்தை அமைத்து, கோயிலின் பூசாரியாகவும் பணியாற்றி வந்துள்ளான்.

இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட தன் கணவருக்காக வேண்டிக்கொள்ள 42 வயதுப் பெண்  வந்துள்ளார். 

அவரைத் தனது 2 சகாக்களுடன் சேர்ந்து கூட்டுப் பலாத்காரம் செய்து கொலை செய்தான் இந்தச் சாது என்கிற கழிசடை. தன் மீது சந்தேகம் வராதிருப்பதற்காக, 'பெண், அருகிலிருந்த நீர் வற்றிய கிணற்றில் விழுந்து காயமானதால், சாதுவின் நான்கு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள சண்டவுஸியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக'த் தன் சகாக்கள் மூலம் பெண்ணின் வீட்டார்க்குத் தகவல் தந்திருக்கிறான். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த பெண்ணின் மகன் தன் தாயின் உடலில் ரத்தக் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்; தன் உறவினர்களிடன் சொன்னார்.

அப்பெண்ணின் குடும்பத்தினர் உகைட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இப்புகாரை ஆய்வாளர் ராகவேந்திரா சிங் பதிவு செய்ய மறுத்துள்ளார். எனவே, மறுநாள் பதாயுவின் கிராமப்புறக் காவல்துறை எஸ்.பி.யான சித்தார்த் வர்மாவிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில், அப்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தப் புகாரைப் பதிவு செய்ய மறுத்த ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி சாது சத்யநாராயணா உள்ளிட்ட மூவரும் தப்ப முயன்றனர். எனினும், சகாக்கள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட, சாது மட்டும் தலைமறைவாகி விட்டான்.

சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் ரத்தக்கறை படிந்த சேலை கோயிலுக்கு அருகில் கிடந்துள்ளது. சாது சத்யநாராயணாவின் ஆசிரம அறையின் கட்டிலிலும் ரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லியில் நிர்பயா 2013இல் பாதிக்கப்பட்டதுபோல், உ.பி. பெண்ணின் உடலில் பல்வேறு பாகங்களில் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி கொடூரமான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இது உடற்கூறு ஆய்வில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் உ.பி. மாநில அதிரடிப் படையின் சிறப்புக் குழுவிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், சாது சத்யநாராயணா பற்றித் துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் யோகி அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, இன்று மேவ்லி கிராமம் வந்திருந்தார். அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியவர், சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

இனியும் இம்மாதிரிச் சாமியார்களின் அட்டூழியங்கள் தொடர்தல் கூடாது என்றால், மக்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடுவதோடு, இவர்கள் குறித்த கடந்த கால வரலாறுகளை அதுபடியாய்த் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். சொந்தபந்தகளிடத்திலும் சொல்லி எச்சரிக்கை செய்தல் வேண்டும்.

===============================================================