சனி, 30 ஜனவரி, 2021

'கொரோனா'...குணமடைந்தோர்க்கான மிக மிக மிக நல்லதொரு தகவல்!


கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19-லிருந்து குணமடைந்தவர்கள் நாவல் கொரோனா வைரஸிலிருந்து குறைந்தது 6 மாத காலம் பாதுகாக்கப்படுகின்றனர், அதற்கு மேலும்கூட நோய் எதிர்ப்பாற்றல் உடலில் வைரஸுக்கு எதிராக வேலை செய்யும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
“நேச்சர்” என்ற இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் வளர்ச்சிபெற்ற நோய் எதிர்ப்புச் சக்தி வைரஸின் உருமாறிய புதுவகைக் கிருமியிலிருந்தும் அவர்கள் உடலைப் பாதுகாக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
நம் உடலின் நோய்த் தடுப்புச் சக்தி உருவாக்கும் ஆண்ட்டி-பாடிகள் இந்த வேலையைச் செய்கின்றன. காரணம், குடல் திசுக்களில் மிச்சமீதமுள்ள கொரோனா வைரஸ் சுவட்டினால் நோய் எதிர்பாற்றல் விழிப்புடன் செயல்படுகிறது.


அதாவது குணமடைந்தவர்களை மீண்டும் வைரஸ் தாக்கலாம் என்று கூறும் இந்த ஆய்வு, நோய்த் தடுப்பாற்றல் முன்பைவிட அதிவேகமாகச் செயல்பட்டு விழிப்புடன் காக்கும் என்கிறது.

கொரோனா வைரஸுக்கு எதிரான ஆண்ட்டி-பாடிகள் பல வாரங்களுக்கு, பல மாதங்களுக்கு, நம் ரத்த பிளாஸ்மாவில் இருக்கும். ஆனால் எப்போதும் ஆண்ட்டிபாடிகளை உற்பத்தி செய்வதைக் காட்டிலும் நோய்த் தடுப்பமைப்பு நினைவு பி செல்களை உருவாக்குகிறது. இது கொரோனாவை அடையாளம் காண்கிறது. இரண்டாவது முறையாகக் கொரோனா அரக்கன் நம் உடலைத் தீண்டும்போது ஆண்டிபாடிகள் துரிதமாக வேலை செய்கின்றன. கொரோனா வைரஸ் நம் நுரையீரல், மேல் தொண்டை, சிறுகுடல் பகுதிகளில் தன்னை இரட்டிப்பாக்கிக் கொள்வதால் இந்த உடல் உறுப்புகளில் அதன் மிச்சம் மீதி ஒட்டிக்கொண்டிருக்கும். இது நினைவு பி செல்களை ஊக்குவிக்கிறது.

முந்தைய ஆய்வில் காலம் போகப் போக ஆண்டிபாடிகள் எண்ணிக்கையில் குறையும் என்று கூறப்பட்டதை மறுத்து இந்த ஆய்வு ஆண்டிபாடிகள் எண்ணிக்கை தொடர்ந்து தன்னை அதிகரித்துக் கொள்ளும் என்கிறது. 

கொரோனா நோய்த்தொற்று குணமடைந்த பிறகும்கூட மெமரி பி செல்கள் பல சுற்று உருமாற்றம் அடைந்து விழிப்புடன் இருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

எனவே வைரஸ் மீண்டும் தாக்கினாலும் கவலையில்லை எனலாம்.
===========================================================================
ஆதாரம்: tamil.news18.com