'நிம்போமேனியா' என்றால் இது என்ன?
பெண்களிடம் காணப்படும் கட்டுப்படுத்த முடியாத பாலியல் உணர்வுகளை “நிம்போ மேனியா”[ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலை Satyriasis - சட்டைரியாஸிஸ் எனப்படும். பெண்ணுக்கு அதிகமாக இருத்தல், "Nymphomania" - நிம்போ மேனியா எனப்படும்] என்பார்கள்.
பெண்களின் பாலியல் விருப்பம் இல்லாமை என்பது எப்படி ஒரு செக்ஸ் குறைபாடோ, அது போல அதிகக் காம உணர்வும் ஒரு குறைபாடுதான். இதற்கு ஹோமியோபதி மருத்துவத்தில் அற்புதமான தீர்வுகள் உண்டு[இது குறித்த பதிவு பின்னர் வெளியாகக்கூடும்!].
வரலாற்று ஆய்வு ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், பழங்காலம் தொட்டே இந்த நிம்போமேனியாக்கள் இருந்திருக்கிறார்கள்.
அதிக ஆண்களைப் படுக்கையில் வீழ்த்திய முதல் பெண்ணாகக் கருதப்படுபவர் ரோமப் பேரரசர் அகஸ்டசின் மகள் ஜூலியாதான். அழகு, அறிவு, படிப்பு என்று எல்லாத் திறமையும் இருந்தும் இவர் காம சுகத்தின் மீதும் மிக மிஞ்சிய ஆர்வம் கொண்டிருந்தார். ஒன்றிரண்டாக ஆரம்பித்த இவரது காதலர்களின் எண்ணிக்கை கணக்கிடமுடியாமல் சென்றது. ரோம் நகரில் வாழும் இளைஞர்களில் பாதிக்கு மேல் இளவரசியோடு இரவைக் கழித்தவர்களாகவே இருந்தார்கள். இவரோடு படுக்கையைப் பகிர்ந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியதாம்!!!
இரண்டாவது இடத்தில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்ச் நடிகையான மெல்லி துபோய்ஸ் வருகிறார். 20 ஆண்டுகளில் தான் சந்தித்த எல்லா ஆண்களைப் பற்றிய விவரங்களையும் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். அவரது காதலர்களின் எண்ணிக்கை 16, 527. சராசரியாக ஒரு நாளைக்கு மூன்று ஆண்களுடன் பஞ்சணையைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
இந்தப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடிப்பவர் ரோமப் பேரரசி வலேரியா மெசலீனா. இவர் பேரரசர் கிளாடியசின் மனைவி. தொடக்கத்தில் அரசி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அரண்மனை ஊழியர்களைப் படுக்கைக்கு அழைத் தார். இவர் ஒரு முறை விலைமாது ஒருவருடன் போட்டி வைத்து ஆண்களுடன் உறவு கொண்டார். அதில் 24 மணி நேரத்தில் 25 ஆண்களுடன் உறவு கொண்டுள்ளார்.
நான்காவது இடத்தில் வருபவர் 1934இல் புகழ்பெற்று விளங்கிய பிரெஞ்ச் நடிகை பிரிஜிட்டி பார்டட். ஒவ்வொரு இரவும் எனக்கு ஒரு புதுத் துணை வேண்டும் என்று வெளிப்படையாகவே பத்திரிக்கைக்குப் பேட்டி கொடுத்தவர். 20 வயது முதல் 40 வயதுவரை இவர் சந்தித்த ஆண்களின் எண்ணிக்கை மட்டும் 5 ஆயிரத்தை தாண்டியது.
கலிகாலம்!!!!!
============================================================================