யோனிப் பொருத்தம்: சேர்ந்து வாழ்ந்து[Living Together] மனம் சோர்ந்துபோனவன் கதை (Tamil Edition)
by 'பசி'பரமசிவம்
ஆறாவது அறிவைப் பெற்றபின், உணவுண்ணும் முறையில் மாற்றங்களை நிகழ்த்தினான். போலவே, உடலுறவு[புணர்ச்சி] மூலம் இன்பம் பெறுவதிலும் புதிய புதிய உத்திகளைக் கையாண்டான்.
குழந்தை பெறுவதோடு நில்லாமல், உடலுறவுக்கான நேரத்தையும் அதிகப்படுத்தினான். மருந்து, மாத்திரை, லேகியம், மனப்பயிற்சி, உடற்பயிற்சி என்று பலவற்றையும் பயன்படுத்தி விந்து வெளியேறுவதைத் தாமதப்படுத்த முயன்றான். அதில் போதிய பலன் கிடைக்காமல் போகவே, வயாகரா நயாகரா என்று எதையெதையோ தேடி அலைந்தான்; அலைகிறான்.
இது ஒருபுறம் இருக்க, அண்மைக்காலக் கண்டுபிடிப்பான இணையம் இவனின் இன்ப வெறியைத் தூண்டும் சாதனமாக அமைந்துவிட்டது.
இணையத்தில் இடம்பெறும் உடலுறவு தொடர்பான படங்களும் காணொலிகளும் ஆடவரை மட்டுமல்லாமல் மகளிரையும் மிதமிஞ்சிய போதையில் ஆழ்த்துவனவாக உள்ளன.
ரசித்தல், கேட்டல், தொடுதல், உரசுதல் முதலான சல்லாபங்கள் முடிந்து, அந்தரங்க உறுப்புடன் உறுப்பு இணைத்து இயங்குவதிலான ஆண்களுக்குள்ள பலவீனத்தை மிகத் தெளிவாகப் பெண்கள் புரிந்துகொள்ளவும் இந்தக் கண்டுபிடிப்பு உதவிகரமாக அமைந்துவிட்டது. விளைவு?
இயற்கையாகவே, எளிதில் உச்ச சுகத்தைத் தொட்டுவிடாத அவர்களைத் திருப்திபடுத்த ஆண்கள் படாதபாடெல்லாம் படுகிறார்கள்.
புணர்ச்சி செய்யும்போது விதம் விதமான உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டு ‘பரவாயில்லை’ என்று சொல்லும் அளவுக்குத் ‘திருப்தி’ அளிப்பவர்களைச் சாதனையாளர்கள்[சராசரிக்கும் மேலே] என்றும், ‘சுமார்’ என்கிற அளவுக்குச் சுகம் தருபவர்களைச் ‘சராசரி’கள் என்றும், பின்தங்கியிருப்பவர்களைப் ‘பலவீனர்கள்’ என்றும் வகைப்படுத்தியிருக்கிறார்கள் ‘பாலியல்’ மருத்துவர்கள். இம்மூன்றுக்குமான 'இயங்கும் கால அளவு' வரையறுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
அறிவரசு, ‘தகவல் தொழில்நுட்பத் துறை’யில் பணிபுரியும் முப்பது வயது இளைஞன். உடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்ந்து[Living Together], உடலுறவுச் சுகத்தையும் அனுபவித்த நிலையில் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். இவனின் விருப்பத்தை நிராகரிக்கிறாள் அவள். அந்தக் கசப்பான அனுபவம், ‘அது’ விசயத்தில் அவன் ‘சாதனையாளன்’ அல்ல என்பதைச் சற்றே தாமதமாக அவனுக்குப் புரியவைத்தது. தான் சராசரியா, அதற்கும் கீழேயா என்ற கேள்வி அவனைக் கவலைப்பட வைத்தது. அவனைப் பெற்றவர்கள், வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்த கொஞ்சம் நாட்களில், கழுத்தை நீட்டியவள் காதலனோடு ஓடிப்போனது நெஞ்சைச் சுட்டுக்கொண்டிருந்த கவலைப் பெரு நெருப்பில் நெய் வார்த்தது.
‘இனி திருமணமே வேண்டாம்’ என்று முடிவெடுத்திருந்த இவனின் மனதை மாற்றுவதற்கு நல்ல நண்பனொருவன் கடும் முயற்சியை மேற்கொண்டான். அவன் தன் முயற்சியில் எவ்வாறு வெற்றி கண்டான் என்பதை விவரிப்பதோடு இந்தக் குறுநாவல் முற்றுப்பெறுகிறது.
இயன்றவரை, தொய்வில்லாத விறு விறு நடையைக் கையாண்டு கதை சொல்லியிருக்கிறேன். உங்கள் மனதில் நிரந்தரமானதொரு இடத்தை இது கைப்பற்றும் என்னும் நம்பிக்கை எனக்குள்ளது.
வாசித்து மகிழுங்கள்.
================================================================================================