விண்வெளி ஆய்வு உள்ளிட்டவைகளுக்குப் பயன்படுத்தும் நோக்கில், இதுபோன்ற கலப்பினத்தை உருவாக்கும் முயற்சிகள் முன்பு சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது[என்ன ஆயிற்று?].
இது சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படுவதால். பல நாடுகளில் இதற்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இந்த ஆய்வின் மூலம் மனிதர்களுக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்யும்போது, தேவையான உறுப்புகளை விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், இந்த 'மனிதன் – விலங்கு' கலப்பினக் கருவை உருவாக்க வேண்டும் என்ற ஜப்பான் ஆய்வாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அந்நாட்டு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதற்குப் பல்வேறு தரப்பினரிடம் இருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் குவிந்து வருகின்றன//[https://www.sathiyam.tv/jeppan-government-approved-human-and-animal-reasearch/ -01/08/2019 9:42]
எதிர்ப்பவர்கள் என்ன காரணத்தால் எதிர்க்கிறார்கள் என்பது பற்றியோ, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரிக்கிறார்கள் என்பது பற்றியோ இக்கட்டுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
கூரு கெட்ட கடவுள், வதவதன்னு தேவையே இல்லாமல் கோடானு கோடி உயிர்களைப் படைத்து இந்த உலகைப் பெரிய போராட்டக் களமாக ஆக்கி வைத்திருக்கிறார். கோடிகளில் இதுவும் ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்பதுதான் நம் எண்ணம்.
ஜப்பான் ஆய்வாளர்களின் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துவோம்!
======================================================================================