இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது. இதயப் பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதய நோய்ப் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் 'கார்டிசால்' என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது.
ஆய்வு விவரங்கள் குறித்து கிடியான் மேலும் கூறியதாவது:
மன உளைச்சலுக்குக் கார்டிசால் ஹார்மோன் சுரப்பு முக்கியக் காரணம். மன உளைச்சல் அதிகரித்தால், அட்ரீனல் சுரப்பியில் கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இன்சுலினின் செயலுக்கு எதிராகச் செயல்படும் குணம் கொண்டது கார்டிசால். இதன் அளவு அதிகமானால், குளுக்கனோஜெனிசிஸ் வினை காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து கார்டிசால் அதிகம் சுரந்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
தலைமுடி சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு செ.மீ. நீளம் வளர்கிறது. 1 செ.மீ. நீளத் தலைமுடியை ஆய்வு செய்து, அதில் கார்டிசால் அளவைக் கணக்கிட்டால் ஒரு மாத காலத்தில் நம்மைப் பாதித்த மனஉளைச்சல் பற்றித் தெரிந்துகொள்ளலாம். 6 மாத காலத்துக்கு மனஉளைச்சல் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள 6 செ.மீ. நீள தலைமுடி போதும். மேலும், கார்டிசால் அளவைக் கொண்டு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.
======================================================================================
நன்றி: https://senthilvayal.com/page/1234/?pages-list