#'தமிழர்கள் சோர்ந்திருக்கும் இவ்வேளையில், தமிழ் இனத்தவருக்கு உற்சாகமூட்டி உலகத் தமிழர் அனைவரையும் ஒருங்கிணைக்க வல்ல ஒரு பாடலை உருவாக்கத் திட்டமிட்ட ஏ.ஆர்.ரஹ்மான், அப்பாடலை நான் எழுதுதல் வேண்டும் என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
நானும், 'புயல் தாண்டியே விடியல்' என்னும் வரியைத் தொடக்கமாகக் கொண்ட பாடலை எழுதினேன்.
இப்பாடலைத் தயங்காமல் அள்ளி எடுத்துக்கொண்டார் ரஹ்மான்.
பற்பல இரவுகளை அவரின் ஒலிக்கூடத்திலேயே கழித்தேன். பாடல் அழகிய வடிவம் பெற்றது; விரைவில் வெளிவரவுள்ளது.
இதற்கு அவர் தேர்வு செய்த தலைப்பு, 'மூப்பில்லா தமிழே தாயே' என்பதாகும். தமிழ், தமிழர் நலம் குறித்தெல்லாம் நாங்கள் இருவரும் உரையாடியிருக்கிறோம். அவ்வுரையாடலில், தமிழ்த் தேசியம், அரசியல், சமூகவியல் ஆகியவையும் உள்ளடக்கமாக இடம்பெற்றுள்ளன.'#
தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர் நலனிலும் பெரும் பற்றுக்கொண்ட கவிஞர் தாமரையையும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும் மனமுவந்து பாராட்டுவோம்; போற்றுவோம்!
அறிமுக விளம்பரம்[Teaser]:
======================================================================================