'ஈராக்கில் மூன்று ஆண்குறிகளுடன் பிறந்த குழந்தையை மருத்துவ உலகினர் மிரட்சியுடன் பார்த்து வருகின்றனர்.
மருத்துவ உலகினரையே மலைக்கச் செய்து சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டது ஈராக்கைச் சேர்ந்த அந்த 3 மாத ஆண் குழந்தை. அக்குழந்தைக்கு இயற்கைக்கு மாறாக 3 ஆண்குறிகள் உள்ளன.
'எங்களுக்குத் தெரிந்தவரையில் மூன்று ஆண்குறிகளுடன் அல்லது triphallia உடன் பிறந்த குழந்தை எனப் பதிவான முதல் நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்' என்று மருத்துவர் ஷாகீர் சலீம் ஜபலி, International Journal of Surgery Case Reports என்ற மருத்துவ இதழில் எழுதியுள்ளார்.
ஈராக்கின் துகோக் பகுதியைச் சேர்ந்த குர்து இனத்தைச் சேர்ந்த அந்த ஆண் குழந்தைக்கு ஆண்குறியில் வலி இருப்பதாக அவனது பெற்றோர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அப்போதுதான் மருத்துவர்கள் அக்குழந்தைக்குக் கூடுதலாக இரண்டு ஆண்குறிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். இவற்றில் ஒன்று 2 செ.மீ மற்றும் மற்றொன்று ஒரு செமீ அளவுடையது[இன்னொன்றன் அளவையும் தந்திருக்கலாமே?].
50 முதல் 60 லட்சம் ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு மட்டுமே இது போல, பிறவியிலேயே கூடுதலான ஆண்குறிகளுடன் பிறக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ உலகினர் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு இந்தியாவில் இது போன்ற குழந்தை பிறந்ததாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், அக்குழந்தை குறித்து முறையான மருத்துவப் பதிவு ஏதும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் இப்படியான நிலையில் பிறந்த குழந்தைக்கு, மும்பையில் உள்ள சியோன் மருத்துவமனையில், சிக்கலான 6 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் மூன்று ஆண்குறிகள் ஒன்றாக்கப்பட்டது என்று அறியப்பட்டுள்ளது.
முதல் முறையாக, 1609ஆம் ஆண்டு triphallia உடன் ஒரு குழந்தை பிறந்ததாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை உலகில் இது போன்ற அபூர்வ அமைப்புடன் 100 குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் மருத்துவ உலகினர் தெரிவிக்கின்றனர்.
உலகச் சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, மருத்துவர்கள் இன்னும் இந்தக் குறைபாட்டுக்கான காரணத்தைக் கண்டறியவில்லை. ஆனால், அவர்கள் அதை இரண்டு ஸ்க்ரோட்டம்கள் அல்லது ஆசனவாய்களுடன் பிறப்பது போன்ற பிற பிறவிப் பிறழ்வுகளுடன் இணைத்துள்ளனர்.'
* * * * *
இதைப் படித்து முடித்ததும் நீங்கள் என்ன நினைப்பீர்களோ, என் மனதில் உதித்த எண்ணம் இதுதான்:
"கடவுளே, மனுசனுக்கு ஆறறிவைக் கொடுத்தாய். அது போதாதுன்னு நீ நினைச்சா, கூடுதலா ஏழாவது எட்டாவது அறிவுகளையும் கொடு. அதை விடுத்து, 'இது' விசயத்தில் இப்படி ஒன்றுக்கு மூன்றாகக் கொடுத்து இம்சிக்க நினைக்கிறாயே, இது நியாயமா கருணாமூர்த்தியே?!"
======================================================================================