சனி, 1 மே, 2021

இது நான்காம் பாலினம்?!?!

'பிங்க்பிங்' என்பவள் சீனா நாட்டுப் பெண்; வயது 25.

கணுக்கால் காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனை சென்றாள். 

கணுக்காலை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள், காயத்துக்கு உரிய சிகிச்சையைச் செய்துவிட்டு,  இளம் பருவம் முதலே  எலும்புகள் சரியாக வளரவில்லை என்றும், மற்றவர்களை விடவும் அவள் மிகவும் மெதுவாக வளர்வதாகவும் கூறினார்கள். 

காலப்போக்கில் அந்தக் குறை சரியாகிவிடும் என்று அவள் நம்பினாள்.

அவளுக்குத் திருமணம் ஆனது. குழந்தைப் பேறு வாய்க்கவில்லை.

ஜெஜியாங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றாள்; "நானும் எனது கணவரும் பல வருடங்களாகக் குழந்தை பெறுவதற்காக முயற்சி செய்து வருகிறோம். முயற்சி வெற்றி பெறவில்லை. அதற்கும் இந்த எலும்புப் பிரச்சனைக்கும் சம்பந்தம் உண்டா?” என்று மருத்துவர்களிடம் கேட்டாள். 

அவளுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், உயர் ரத்த அழுத்தமும் மற்றும் இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைந்திருப்பதும் தெரிந்தது. அது 'பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனப்படும் நோய்க்கான அறிகுறி' என்று மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள்.

மரபணுப் பரிசோதனையும் செய்யப்பட்டது. குரோமோசோம் xy[ஆணுக்குரியது] ஆக இருந்தது.

முடிவில், 'பிங்க்பிங்' பிறப்பால் ஓர் ஆண் என்றும், அவருக்குக் கருப்பைகள் இல்லை என்றும் மருத்துவர்கள் உறுதிபடச் சொன்னார்கள். 

ஆனால், ஆண்மகனான 'பிங்க்பிங்'கிற்கு ஆண்  உறுப்பு இல்லாததும், அதற்குப் பதிலாக அவருக்குப் பெண் உறுப்பு இருந்ததும் எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!

-இது, இணையத்தில் நான் வாசித்தறிந்த அதிசயச் செய்தி.

முக்கியக் குறிப்பு:

ஆண் என்றால் 'ஆணுறுப்பு' அவசியம்; அது இந்த நபருக்கு இல்லை. ஆகையினால், இவர் ஆண்மகனல்ல.

பெண்ணுறுப்பு இருந்தும் கருப்பை இல்லாததால் பெண்ணுமல்ல.

ஆறறிவுக்கும் மேலான பேரறிவு படைத்தவர் கடவுள் என்றால், இப்படியான குழறுபடிக்கெல்லாம் தன் படைப்பில்  இடம் தரமாட்டார். எனவேதான் நான் சொல்கிறேன்..... 

"கடவுள் என்று ஒருவர் இல்லை... இல்லவே இல்லை" 

ஹி...ஹி...ஹி!!

===============================================================================

https://tamil.samayam.com/viral-corner/omg/chinese-woman-who-tried-to-get-pregnant-for-one-year-was-shocked-to-find-out-that-she-was-born-man/articleshow/81527085.cms