உண்ணும் உணவு எளிதில் செரிப்பதற்கு மட்டுமே பயன்படுகிற ஒன்று இது என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இது தவறு. பாக்கும் சுண்ணாம்பும் பிறவும் இணைந்த வெற்றிலையின் பயன்கள் ஏராளம் என்பதை அறியத்தருதலே இப்பதிவின் நோக்கமாகும்.
*வெற்றிலைக்குப் பல்வேறு மருத்துவக் குணங்களும், சக்திகளும் உள்ளன. வெற்றிலை ஒரு சிறந்த மூலிகையும் கூட.
*வெற்றிலை அனைத்து வலிகளுக்கும் நிவாரணி ஆகும். வெட்டுகள், சிராய்ப்புகள், வீக்கம் என அனைத்திற்கும் வெற்றிலையைப் பயன்படுத்தலாம்.
*வெற்றிலையை அரைத்துப் பசையாக்கிக் காயங்களின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். உட்புற வலிகளுக்கு வெற்றிலையை மென்றோ அல்லது சாராகவோ குடிக்கலாம். இதன்மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்
*இரைப்பையைச் சுத்தம் செய்வதற்கும் இது உதவுகிறது. இரைப்பையில் வலி ஏற்பட்டால் உடனடியாக வெற்றிலையை மென்று தின்றால் வலி குறையும்.
*வெற்றிலை அதிகப் பசியை ஏற்படுத்தும்; நிறையச் சாப்பிடத் தூண்டும் என்பதால் உணவு உண்பதில் எச்சரிக்கை தேவை. தவறினால் உடம்பில் சதை போடும் ஆபத்து உண்டு. எனவே, குண்டாக இருப்பவர்களுக்கு வெற்றிலை வேண்டாம்.
*இந்த இலை, வாயில் ஏற்படும் கிருமிகள், பாக்டீரியா போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
*இது, உணவிலுள்ள நச்சுத் தன்மையை நீக்கும்; உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றி, குடலைச் சுத்தமாக்கும்; உடலுக்கு உறுதி தரும்; சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
* ஞாபக மறதி மற்றும் அதிர்ச்சி ஏற்படுத்தும் மூளை நரம்புச் சிதைவு வேதிம நச்சுக் காரணிகளைச் சிதைத்து உரிய பாதுகாப்பு அளிக்கிறது வெற்றிலை. பாக்கின் மூலப்பொருட்கள் வயதாகும் நிலையில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்க அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
*வெற்றிலைச்சாறு குடற்பகுதியில் பயனுள்ள நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கிறது. பயனுள்ள நுண்ணுயிரிகள் பெருக்கம் உணவு ஒவ்வாமையைப் போக்க உதவுகிறது. நோய் எதிப்பாற்றலை அதிகரிக்கிறது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், கல்லீரலில் புரத உணவால் மிகுதியாகத் தேங்கும் அமோனியாவை வெளியேற்றிப் பாதுகாப்பு அளிக்கிறது.
*சுண்ணாம்பில் கால்சியம் சத்து உள்ளது. கால்சியம் இரத்தத்தில் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மிகக்குறைவாக இருக்கும். இந்நிலையில் எலும்புப் பகுதியிலிருந்து கால்சியம் சத்து வெளியேறி இரத்தத்தில் சீரான அளவு இருக்க இது உதவுகிறது.
*வெற்றிலையை மெல்வது வாயைச் சுத்தப்படுத்தும். பாக்கும் சுண்ணாம்பும் சேர்த்து இலையைக் கொதிக்கவைத்து அந்தத் தண்ணீரால் பிறப்புறுப்பைக் கழுவினால் அங்கு ஏற்பட்டுள்ள அலர்ஜி விரைவில் குணமடையும். மேலும் இது பெண்களின் பாலியல் ஆசையையும் தூண்டும்.
*சிறுநீரகக் கோளாறுகள் இருந்தால் அதனையும் சரிசெய்யும். வெற்றிலைச் சாற்றைத் தேனில் கலந்து தினமும் குடித்து வந்தால், அது மூளையைச் சுறுசுறுப்படையச் செய்யும்.
*'வெற்றிலையானது, ஆண்மையை வெகுவாக அதிகரித்து, படுக்கையறையில் சிறப்பாகச் செயல்படத் தூண்டுகிறது' என்கிறார்கள் அனுபவசாலிகள். 'இதில் உள்ள அமிலங்கள் காம உணர்ச்சியைப் பெருகச் செய்வதோடு விரைவில் விந்து வெளியேறுவதையும் தடுக்கிறது. தம்பதியர் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வழிகிறது' என்கிறது ஓர் ஆய்வு.
ஆக, வெற்றிலை நமது பண்பாட்டின் அடையாளம் மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்தின் அடிப்படையும் ஆகும் என்பதை ஒருபோதும் மறவாதீர்.
இனியேனும், வெற்றிலை குதப்புவது கிழடுகளுக்கானது என்று நினைக்காமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாங்கி மென்று சுவைத்து இன்புறுங்கள்!
[கருத்துகள், பல தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை]
======================================================================
என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் உள்ளூர் நண்பர்: "ஏம்ப்பா, பதிவுக்கு வேறு பொருத்தமான தலைப்பு கிடைக்கலையா?"
நான்: "அது வந்து...ஹி...ஹி...ஹி!"