அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 21 மே, 2021

கோவையில் கொரோனா கடவுளுக்கு ஒரு கோயில்!!!

1967ல் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த ஆண்டு மட்டும் அம்மை[பெரியம்மை] நோயால் 15 மில்லியின் மக்கள்  பாதிக்கப்பட்டு அவர்களுள் இரண்டு மில்லியன் மக்கள் இறந்தனர் என்பது செய்தி[சின்னம்மை மிகவும் அரிதாகவே உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது].

தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், 'அம்மன்' என்னும் பெண் தெய்வத்தின் கோபத்தால் இந்த நோய் உருவானதாகக் கருதிய நம் மக்கள், அந்த நோய்க்கு 'அம்மை' என்று பெயரிட்டு வழிபட்டார்கள். 

எட்வர்ட் ஜென்னர் இந்நோய்க்கான தடுப்பு மருந்தை 1796ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதன் பிறகு இந்நோயின் தாக்குதல் எங்கும் அறியப்படவில்லை. ஆயினும், அத்தெய்வ வழிபாடு இன்றளவும் தொடர்கிறது.

அம்மன் வட இந்தியாவில் ஷீதல் மாதா என அழைக்கப்படுகிறார். ஷீதல் என்பதற்குக் குளிர் அதாவது, அம்மை நோயின் வெப்பத்தைக் குளிர்விப்பவள் என்று  பொருள்.

உலகெங்கும் பிளேக் நோய் பரவியபோது ஹரிதி என்னும் ஓர் அரக்கன் மூலம் பரவியதாகப் பல நாடுகளில் நம்பப்பட்டு அதை அழிக்க ஒரு தெய்வத்தை உருவாக்கி அதைப் பல நாட்டவரும் வழிபட்டார்கள் என்பது வரலாற்றுச் செய்தி.

இதற்கிடையே, கொரோனா கொடுந்தொற்றின் 'கொட்டம்' கட்டுப்படுத்த இயலாத நிலையில், அதை ஒரு வழிபடு கடவுளாக்கினார் கேரளாவைச் சேர்ந்த ஒரு பூசாரி[http://www.puthiyathalaimurai.com/newsview/71992/Kerala-man-builds-a-shrine-for--Corona-Devi--to-ward-off-COVID-19-pandemic].

அவரையடுத்து, கோவை மாவட்டம் இருகூரைச் சேர்ந்த ஓர் இளவட்டச் சாமியார் கொரோனா சாமிக்குக் கோயில் எழுப்பிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்[காணொலியின் முகவரி கீழே].





ஆகச் சிறந்த ஒரு கேள்வி:

கஞ்சா, அபினி, கள்ளச்சாராயம் என்று போதைப் பொருள்களை விற்றுப் பிழைப்பு நடத்துபவர்களைக் குற்றவாளிகளாகக் கருதித் தண்டிக்கிற அரசாங்கம், புதுப் புதுக் கடவுள்களின் பெயரால் பக்திப் போதையூட்டி மக்களின் சிந்திக்கும் அறிவைச் சீரழிக்கிற பூசாரிகளையும் சாமியார்களையும் கண்டுகொள்வதில்லையே, ஏன்?!  

======================================================================
காணொலி: