எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 20 மே, 2021

கொரோனா 2ஆம் அலையும் மனம் திருந்தாத மதவாதிகளும்!!!

"இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதல் அலையில் கருணை காட்டிய கொரோனா 2-ஆவது அலையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கட்டுப்பாடற்ற மதக் கூட்டங்களே இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவக் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பாக ஐ.சி.எம்.ஆர் ஆய்வு கூறியதாவது: இரண்டாவது அலைக்குக் காரணம் என்று நம்பப்படும் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் வெளிநாட்டுப் பயணிகளால் அறிமுகப்படுத்தப்பட்டுப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் மதக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களால் நாட்டிற்குள் பரப்பப்பட்டது."
{இது, இன்று முன்னிரவில் வெளியான காட்சி ஊடகச் செய்தி -Thursday, May 20, 2021, 11:38 [IST]}



மேற்கண்ட செய்தியின் மூலம் தெள்ளத் தெளிவாக நாம் புரிந்துகொள்ளும் உண்மைகள்.....

ஓன்று:
'திருத்தப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, திருத்த வேண்டியவர்களும் திருந்தவில்லை!'

இரண்டு:
மூடர்களை முயன்றால் திருத்தலாம். முழு மூடர்களைத் திருத்துவது
சாத்தியமே இல்லை!!!

===============================================