இவர், தன் காரிலேயே தனக்கான மினி வீடு ஒன்றைக் கட்டியிருக்கின்றார்.
இவர், தனது 'ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை'த் தனக்குப் பிடித்தவாறு மாடிஃபை செய்திருப்பதாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவைப் பொருத்தவரை வாகன மாடிஃபிகேஷன் என்பது சட்டத்திற்குப் புறம்பான செயலாகும். ஆனால், ஜக்கி வாசுதேவ் இந்தச் செயலை இந்தியாவில் வைத்துச் செய்யவில்லை.
இந்தியாவைச் சேர்ந்த ஜக்கி வாசுதேவ் அவ்வப்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில், அண்மையில் அமெரிக்கா சென்ற அவர், தனது பயணங்களுக்காகப் பிரத்யேகமாக ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக்கினை அமெரிக்காவிலேயே மாடிஃபை செய்திருக்கின்றார்.
இது குறித்த வீடியோவை 'ஈஷா சத்குரு' எனும் அவரது யுட்யூப் சேனலிலேயே அவர் வெளியிட்டுள்ளார்.
ஜக்கி வாசுதேவ் ஃபோர்டு எஃப்150 பிக்-அப் ட்ரக் மிகக் கடுமையாக மாடிஃபிகேஷனுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அதன் டயர், நிறம், மின் விளக்குகள் மற்றும் உடற்பாகங்கள் என முக்கியக் கூறுகள் பல மாடிஃபிகேஷனுக்காக நீக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், நீக்கப்பட்டவைகளுக்குப் புதிதாக ஆஃப்டர் மார்க்கெட் பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயலால் அக்கார் அதன் உண்மைத் தோற்றத்தை இழந்து, புதிய தோற்றத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தக் காரணத்திற்காகத்தான் இந்தியாவில் வாகன மாடிஃபிகேஷன் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணம், மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்கள் சட்டத்திற்குப் புறம்பான அல்லது விதிமீறல்களில் ஈடுபடும்போது அதனை இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. .
மாற்றியமைக்கப்பட்டிருக்கும் ஃபோர்டு எஃப் 150 பிக்-அப் ட்ரக் உலக நாடுகள் சிலவற்றிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.
நன்றி: https://tamil.drivespark.com/four-wheelers/2021/jaggi-vasudev-converted-ford-f150-pick-up-truck-like-a-mini-home-028003.html -May 25, 2021, 17:54 [IST]