ஜப்பானில் உள்ள நாரா மகளிர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சாகோக்ளோசான் என்ற கடல் அட்டை குறித்து ஆராய்ச்சி நடத்தி வந்தனர். ஒரு நாள்.....
தங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்த கண்ணாடி மீன் தொட்டியில், இருந்த ஒரு கடல் அட்டையின் தலை மட்டும் தனியே நீந்தியபடி இருந்தது. அதன் உடல் தனியே மிதந்து சில மணி நேரத்தில் இறந்துவிட்டது. அடுத்து நடந்த நிகழ்வு அவர்களைப் பிரமிப்பில் ஆழ்த்தியது.
உடல் அழிந்துவிட்டாலும், அழியாமல் இருந்த தலை, மெல்ல மெல்ல, தனது உடலை வளர்த்துக்கொண்டே வந்தது. அடுத்த சில நாட்களில், அந்த அட்டைக்கு, இதயம் உள்பட உடலின் அனைத்து உள் அங்கங்களும் கொண்ட புதிய உடல் உருவாகிவிட்டது.
அட்டைகளுக்கு இப்படி ஒரு சக்தி இருப்பதை முன்முதலாக அறிந்த விஞ்ஞானிகள் இவர்களே. அட்டைகள் உலகில் இப்படி ஒரு நிகழ்வு பதிவாவதும் இதுவே முதல் முறை என நாரா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
நன்றி: https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=665191
===========================================================================
மகாபாரதக் கதையில் வரும் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டி ஆவார் 'சத்தியவதி' . இவர் உபரிசரன் என்ற மன்னனின் மகள்; பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கொள்ளுப்பாட்டனான 'சாந்தனு'வின் இரண்டாவது மனைவி; முன்னதாக, 'பராசரன்' என்னும் முனிவருடன் 'கூடி'[இது வேறு கதை] வேதங்களையும் மகாபாரதத்தையும் தொகுத்தவரான வியாசரை இளவயதில் பெற்றெடுத்தத் தாய்; மிகப் பெரிய குரு வம்சத்தின் இராஜமாதா ஆவார்[விக்கிப்பீடியா].
இந்த ராஜமாதா பிறந்த கதை மிக மிக மிகவும் சுவையானது. கற்பனையின் எல்லையைத் தொட்டுவிட்ட கதை. இதற்கு இணையானதொரு கற்பனைக் கதை[புளுகுக் கதை] இன்றளவும் படைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
வாசித்து இன்புறுக! அவ்வப்போது நினைவுகூர்ந்து கழிபேருவகை எய்துக!!
உபரிசரன், ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது, தன் மனைவியோடு இன்பமாக இருப்பது போல் நினைக்க, அந்தக் கணமே அவரிடமிருந்து விந்து வெளிபட்டுவிட்டது[அடப் பாவமே!]. அதை வீணாக்க மனம் இன்றி ஓர் இலையில் விட்டு ஒரு கிளியிடம் கொடுத்துத் தன் மனைவியிடம் சேர்க்கும்படி வேண்டிக்கொண்டார்[அதை என்ன செய்யணும்னும் சொல்லியிருக்கலாம்].
அதை எடுத்துக் கொண்டு பறந்த கிளியை ஒரு பருந்து தாக்கிவிட, இலையிலிருந்த விந்து கடலில் விழுந்தது.
கடல் நீரில் விழுந்த அந்த விந்துத் துளியை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீன், பிரம்மாவின் சாபத்தால் உருவம் மாறியிருந்த தேவ கன்னிகையாவாள்[மனிதக் குழந்தையைப் பெற்ற பின்னர் சாபம் நீங்கி மீண்டும் தேவ கன்னிகை ஆகிறாள்].
சில நாட்களுக்குப் பின் மீனவர்கள் அந்த மீனைப் பிடித்தபோது அதன் வயிற்றில் ஆணும், பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் அவற்றைக் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக்கொண்டு, பெண் குழந்தையை மீனவர் தலைவனிடம் கொடுத்து[நல்ல வேளை, எருக்கம்பால், நெல்மணின்னு எதையும் தேடிக்கொள்ளவில்லை!] வளர்க்குமாறு கூறிவிட்டார் அவர்[இதன் பின்னரான கதையெல்லாம் முன்பே தொலைக்காட்சித் தொடர்களில் பார்த்திருப்பீர்கள்]. இதுதான் சத்தியவதியின் பிறப்பு ரகசியம்.
தங்களின் வருகைக்கும் வாசித்து மகிழ்ந்தமைக்கும் நன்றி!
===========================================================================