*'அது' குறித்த நினைவுகளால், ஆனந்தம் கொள்வோரைக் காட்டிலும் அவதிப்படுவோரின் எண்ணிக்கை மிக மிக மிக அதிகம்.
*'அது'வால் விளையும் நன்மைகள் ஏராளம். ஆனால், அவற்றைப் பெற்றுவிடாமல் தடுக்கும் தடைக் கற்களோ தாராளம்!
*'அது 'அளவாக இருந்தால் நன்மைகள் பல உண்டு. அளவைக் கடந்தாலும் விளைவது நன்மையேதானாம்.
*முழுமையான ஒரு நாள் உடற்பயிற்சிக்குச் சமமானது 'அது'தொடர்பான ஒரு நாள் அனுபவம்.
*தலைவலி, உடல்வலி போன்ற சிறிய வலிகளுக்கும் 'அது' முழு நிவாரணம் அளிக்கிறது.
*நினைவாற்றல் ஆதிகரிக்க 'அது' உதவுகிறது. முதுமையிலும், நினவாற்றல் குறையாமல் பாதுகாக்கிறது.
*தொடர்ச்சியான 'அந்த' அனுபவம், ஆண்களுக்குப் 'ப்ரோஸ்டேட்' புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
*'அந்த' ஒரு நாளில் பெறும் சுகம், அன்றைய இரவு ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
*ஏராள நன்மைகளை வாரி வழங்குவதோடு இரண்டு உள்ளங்கள் இரண்டறக் கலப்பதற்கும் உதவுகிறது 'அது' என்பது எந்நாளும் நினைவில் கொள்ளத்தக்கது.
*இப்படி, அதனால் எத்தனை எத்தனை நன்மைகள் இருப்பினும், 'அது' பற்றி வெளிப்படையாகப் பேசும் மனப்பக்குவம் நம் மக்களிடம், 'இல்லை...இல்லை...இல்லவே இல்லை' என்பது புரியாத புதிராகவே உள்ளது.
"புதிர் இருக்கட்டும், அந்த 'அது' எது?" -இது கேள்வி.
"'அது', நீங்கள் நினைக்கிற 'அதுவே'தான்!" -இது பதில்!
இவை, எங்கெல்லாமோ யாரெல்லாமோ உதிர்த்த 'அனுபவ உரை'கள். அதனால், குறிப்பிட்டு எவருக்கும் நன்றி சொல்லவில்லை!