தமிழர்கள் இந்திக்கு எதிராகச் செயல்படுவதையும், தமிழை நடுவணரசின் ஆட்சி மொழியாக ஆக்குவதற்காகப் போராடுவதையும் கண்டித்தோ கிண்டல் செய்தோ செய்தி வெளியிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது இது.
ஜூன் 10, 2021 தினமலரிலும்[https://www.dinamalar.com/news_detail.asp?id=2781987] இது தொடர்பான செய்திகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சில:
//'...தமிழை, மத்திய ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமாம். இதெல்லாம் இன்றையச் சூழலில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்கும் செயல்கள்.'
'ஹிந்திக்கு எதிராகச் செயல்படுவது போன்றவற்றை, மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.'
'பழைய திராவிடக் குப்பையைக் கிளறாமல், புதிய சிந்தனையுடன் ஆட்சி நடத்த வேண்டும்'//
கூடவே, 'ஹிந்துவிற்கு எதிராக, மீண்டும் போலி நாத்திகக் கும்பல்கள் தலைதுாக்கத் துவங்கியுள்ளன' என்ற சாடலும் இடம்பெற்றுள்ளது.
தமிழால் வயிறு வளர்க்கும்[ஏற்கனவே சொன்னதுதான்] இந்தக் கும்பல் தொடர்ந்து தமிழின உணர்வுக்கும், தமிழுக்கும், மூடநம்பிக்கை ஒழிப்புக்கும் எதிராகச் செயல்படுவது தமிழர்களிடையே கடும் கொந்தளிப்பை உண்டுபண்ணுகிறது.
தாய்மொழி உணர்வும், இனவுணர்வும், மூடநம்பிக்கை ஒழிப்பு உணர்வும் ஏன் தேவை என்பதை எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் இவர்கள் ஏற்கப்போவதில்லை. காரணம்.....
மன்னர்கள் ஆண்ட காலத்திலிருந்து பின்னாளில் உருவான மக்களாட்சிவரை இவர்கள் ஆள்பவர்களை முட்டாள்களாக்கியதன் மூலம் பெற்ற, 'உயர் அந்தஸ்து' பகுத்தறிவு வளர்த்த பெரியாராலும், இனவுணர்வைப் பெருக்கிய திராவிடக் கட்சி சார்ந்தவர்களாலும் பெருமளவில் சிதைக்கப்பட்டதுதான்.
தமிழ் மக்களின் இந்த இன உணர்வும், இந்தி எதிர்ப்புணர்வும், மூடநம்பிக்கை ஒழிப்புணர்வும் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கும் பரவினால், இந்நாள்வரை ஆண்ட... ஆளும் தேசியக் கட்சிகள் செல்வாக்கிழக்க, மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்திய ஒன்றியத்தை ஆட்சி புரியும் நிலை உருவாகலாம்.
அத்தகையதொரு சூழல் உருவானால், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த/இருக்கும்[பல மாநிலங்களில்] அந்தஸ்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது இவர்களுக்குச் சாத்தியமே இல்லாமல் போகும்.
அந்நிலை உருவாகாமல் தடுப்பதற்குரிய வழி, மேற்கண்ட மூவகை உணர்வுகளையும் முற்றிலுமாய் அழித்தொழிப்பது மட்டுமே.
இதைத் தினமலர்க் கும்பல் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறது.
அந்தப் புரிதலால்தான், மேலே குறிப்பிடப்பட்ட உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையிலான செய்திகளை இது தொடர்ந்து வெளியிடுகிறது.
இவர்கள் பரம்பரைப் புத்திசாலிகள்.
கடும் சொற்களால் சாடியும், இழிந்த வார்த்தைகளால் ஏசியும் இவர்களைத் திருத்திவிடவோ முடக்கிவிடவோ முடியாது.
எத்தகையதொரு சூழ்நிலையிலும் மனம் சலிக்காமல், தாம் கற்ற வித்தைகளைக் கையாண்டு எதிரிகளை வீழ்த்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஆகவே, தமிழர்களே,
இந்த நம் 'நிரந்தர' எதிரிகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்; உங்களின் அனைத்து நண்பர்களுக்கும் புரிய வையுங்கள்.
இவர்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க எந்நேரமும் தயாராக இருங்கள்.
============================================================================================
'தினமலம்'... காணொலி:
============================================================================================