பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 9 ஜூன், 2021

ஒத்திவைக்கப்பட்ட ஒரு முதலிரவு!!!

வர்களுக்கு அது முதலிரவு.

மணக்கும் மலர்கள் தூவப்பட்ட ஒற்றைப் படுக்கையில் அவனும் அவளும்.

அரை மணி நேரம் போல, இருவரும் அருகருகேதான் படுத்திருந்தார்கள். ஆனால், ஒற்றுதல் உரசுதல் வருடுதல் என்று முதலிரவுக்கான 'முன்னோட்ட' நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை.

அவன் மல்லாந்து படுத்திருந்தான்.

அறைக்குள் நுழையும்போது அவளின் முகம் முழுக்க விரவிக் கிடந்த வெட்கத்தில் கொஞ்சம் மட்டும் விழியோரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தது. விலகிக் கிடந்த மாராப்பைக் கவனமாக இழுத்துச் செருகிக்கொண்டாள் அவள்; அடித் தொண்டையில் செருமினாள். 

தலையை மட்டும் சற்றே சாய்த்து அவளை உற்றுநோக்கிய அவன், "நீ இருப்பதையே மறந்துட்டு ஆழ்ந்த யோசனையில் மூழ்கிட்டேன்" என்றான், வருத்தத்துடன்.

"யோசனை எதைப்பத்தின்னு நான் தெரிஞ்சிக்கலாமா?" -தயக்கத்துடன் கேட்டாள் அவள்.

"கல்யாணத்துக்கு முன்பே சில மாசங்களாவது நாம ரெண்டுபேரும் பேசிப் பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிட்டிருக்கணும். நம்ம சமூக அமைப்பில் அதுக்கான வாய்ப்பே இல்ல. ஆணும் பெண்ணுமாகப் பழகும்போது ஏடாகூடமா ஏதும் தப்பு நடந்துடுமோன்னு பயந்து பெத்தவங்க அதுக்கு அனுமதிக்கிறதில்ல. ஜோதிடத்தையும், மேம்போக்கான விசாரிப்பையும் நம்பிக் கல்யாணம் பண்ணி வெச்சுடுறாங்க....."

தொடர்ந்து பேசாமல், அவளின் முகபாவனையை ஆராய்ந்தான் அவன்.

அவன் பார்வையின் உள்நோக்கைப் புரிந்துகொண்ட அவள், "மேலே சொல்லுங்க" என்றாள்.

"முரண்பட்ட உணர்ச்சிகள் காரணமாக, கல்யாணம் ஆன ஒரு வருசத்திலேயே தம்பதிகள் பிரிஞ்சுடுறாங்க; விவாகரத்துக்கும் தயார் ஆயிடுறாங்க. அவசரப்பட்டுப் பெத்துக்கிட்ட குழந்தைகளோட எதிர்காலம் பாதிக்கப்படுது. இதைப் பத்தி முன்கூட்டியே யோசிக்கிற  அறிவு பெரும்பாலோருக்கு இல்லை.

கல்யாணமாகி ஒரு வருசத்தில், பிரிஞ்சி வாழுறவங்க எண்ணிக்கை ஆறேழு வருசங்களுக்கு முன்பே முப்பது சதவீதத்துக்கும் மேலே இருந்தது. இப்போ இன்னும் அதிகமா இருக்கும். நம் வாழ்க்கையிலும் இது நடந்துடக் கூடாதுங்கிறது என் கவலை....." -மீண்டும் பேசுவதை நிறுத்தினான் அவன்.

"பெத்தவங்க செய்து வைக்கிற கல்யாணங்களில் மனம் ஒத்து வாழுற தம்பதிகளும் இருக்காங்க. ஆனா, நீங்க கவலைப்படுறதிலும் நியாயம் இருக்கு. நினைக்கிறதைத் தயங்காம சொல்லுங்க. நான் புரிஞ்சி நடந்துக்குவேன்" என்றாள் அவள்.

"ஒரு வருசம் குழந்தை பெத்துக்கிறதைத் தவிர்ப்போம். அந்த ஒரு வருசத்தில் ஒருத்தரை ஒருத்தர் போதுமான அளவு புரிஞ்சிக்க முடியும்கிறது என் நம்பிக்கை. அதுக்கப்புறம் குழந்தை பெத்துக்கலாம். அதனால....."

"அந்த ஒரு வருசத்துக்கு நம் முதலிரவை ஒத்தி வைச்சுடலாம்னு சொல்றீங்களா?" -முகத்தில் அப்பாவித்தனம் மேலிட அவள் கேட்டாள்.

"புதுசு மாறாம இருக்கிற பருவக் குமரி உன்னைத் தினம் தினம் பார்த்து ரசிச்சிக்கிட்டு ஒரு வருசம் பத்தியம் இருக்க என்னால் ஆகாதுடா என் செல்லமே. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு நாளையே அதை நடத்தி முடிச்சுடுவோம். இன்னிக்கி... கொஞ்சம் கொஞ்சி  விளையாடுறது மட்டும். சம்மதம்தானே?" என்று கேட்டு அவளின் இதழ் தடவி, கன்னம் வருடி மன்மதக் கணை தொடுக்கலானான் அவன்.

அளப்பரிய உணர்ச்சிப் போராட்டங்களுடன் அவனின் அகன்ற மார்பில் தன் மார்பகம் புதைத்தாள் அவள். 

============================================================================================