சிறந்ததொரு ஆராய்ச்சியின் மூலம் அமைச்சர் இப்படியொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாகக் கருதி, அதைப் பாராட்டும் வகையில் ஒரு பெட்டி 'விஸ்கி' அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு 'பாஜக' பொருளாளர் S.R.SEKHAR.
உலக அளவில், வகை வகையான எத்தனையோ ஆராய்ச்சிகளுக்கு, விருதுகளும், பட்டங்களும், பண முடிப்புகளும் பரிசுகளாக வழங்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு ஆய்வுக்கும் 'விஸ்கி' பரிசாக அளிக்கப்பட்டதில்லை.
அரியதொரு சாதனையாக, பாஜக பொருளாளர் அறநிலையத்துறை அமைச்சருக்கு இதைப் பரிசாக வழங்கியுள்ள செயல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இவருடைய பெருந்தன்மையைப் போற்றிப் பாராட்டுவதற்கு, பெரிய பல பெட்டிகள் நிறைய 'விஸ்கி' வாங்கி அவருக்கு அனுப்பிடவே என்னுள்ளம் அவாவுகிறது. ஆனால், அதற்கான பொருளாதார வசதி இல்லாததால், இப்போதைக்கு, 'முதுபெரும் பதிவர்' என்னும் தகுதியுடன், 'விஸ்கி' என்னும் அடைமொழியை அவருக்குப் பரிசாக வழங்குகிறேன்.
இனி, பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழகமும், ஏன்... ஒட்டுமொத்த இந்த உலகமும் அவரை 'விஸ்கி' சேகர் என்று அழைக்கக் கடவதாக.
வாழ்க 'விஸ்கி' சேகர்'! வளர்க அவர்தம் புகழ்!!
====================================================================================
.