பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 5 ஜூன், 2021

'இலக்கிய விருதுகள்' அறிவிப்பும், ஓர் 'அறுவை' எழுத்தாளனின் 'அநாகரிக' விமர்சனமும்!!!

தகுதி வாய்ந்த இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட 'இலக்கிய விருதுகள்' குறித்த அறிவிப்பைப் பலரும் விமர்சித்திருக்கிறார்கள்.

அவர்களுள் எழுத்தாளர் ஜெயமோகனும் ஒருவர்.

கலை, இலக்கியம், அரசியல் என்று விமர்சிக்கப்பட வேண்டியது எதுவாயினும், விமர்சனம் செய்பவருக்கு, தற்சார்பின்மை, உயர்பண்பாடு, நிறைகளைப் பட்டியலிட்டுப் பாராட்டிக் குறைகளை மறைமுகமாக உணர்த்தும் நனி நாகரிகம் போன்றவை இன்றியமையாத் தகுதிகளாகும்.

அந்தத் தகுதிகளில் சிலவற்றையேனும் பெற்றிராதவர் எழுத்தாளர் ஜெயமோகன்.

அதற்குச் சான்றாக, அவரின் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில கருத்துரைகளை இங்கே பட்டியலிடுகிறேன்:

*//இந்த இலக்கியப் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருப்பதே இந்த அரசு பதவிக்கு வந்ததில் அதை ஆவேசமாக ஆதரித்த சில எழுத்தாளர்களுக்கு ஒரு பங்குண்டு என்பதனாலும், அவர்களுக்கு, பதிலுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதனாலும்தான் என்றுதான் நினைக்கிறேன். ஏற்கனவே அவர்கள் கணக்குப் பேச ஆரம்பித்துவிட்டனர்.  கட்சியும் ஆட்சியும் வேறுவேறு என்றெல்லாம் இங்கே இவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது//

கேள்வி: 'சொல்லிக்கொண்டிருக்க முடியாது' என்று முடிவெடுத்த இவர், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கவனிப்பிற்காக, மிக நீ...ண்...ட கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன? பதில் சொல்வாரா ஜெய ஜெய மோகன்?

*//விருதுகள், இணையத்தில் கூச்சலிடும் திராவிட இயக்கத்து மொண்ணைகளுக்குச் சென்றுசேரவே வாய்ப்பு மிகுதி// 

கேள்வி: திராவிட இயக்கத்தவர்கள் எல்லாம் மொண்ணைகள், சரி... இவர்? 

மொண்ணை என்னும் சொல்லுக்கு,  முட்டாள், முட்டன், முண்டம், மட்டி, மொட்டை, மூடன், மண்டு என்று பல பொருள் உண்டு. இவரையும் இனி, 'மொண்ணை மோகன்' என்றே அழைக்கலாம். திராவிட இயக்கத்தவர்கள் மொண்ணைகளோ இல்லையோ, இவர் ஒரு 'மொண்ணையன்' என்பது 100 விழுக்காடு உண்மை.

*//ஊடகங்களில் கூச்சலிடும் உடன்பிறப்புகளும் திடீர் உடன்பிறப்புகளும் தரத்தில் பழையவர்களைவிட இன்னும் பின்னால் சென்றுவிட்டிருக்கிறார்கள்// 

கேள்வி: அவர்கள் கூச்சலிடுகிறார்கள். இவர்?

கத்துகிறாரா, ஏதோ ஒரு மிருகம் போல் கனைக்கிறாரா?

*//திமுக எப்படியும் பிராமணர்களை[ப்] பொருட்படுத்தப் போவதில்லை//

கேள்வி: பிராமணர்கள் யாரைப் பொருட்படுத்தினார்கள்? இவரை மாதிரி பூணூல் போடாத பிராமணர்களை மட்டும்தானே? 

*//இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை அறிந்தவர் பல மடங்கு. இந்திரா பார்த்தசாரதியைவிட  இந்திரா சௌந்தரராஜனை மேலான எழுத்தாளர் என நினைப்பவர்களும் பற்பல மடங்கு இருப்பார்கள். ஆகவே ஜனநாயக அடிப்படையில், மக்களின் ஏற்பின் அடிப்படையில் விருது அளித்தால் இந்திரா சௌந்தரராஜனே இலக்கிய விருதுகளை எல்லாம் பெறவேண்டும்.//

கேள்வி: இந்திரா சௌந்தரராஜன் தன்னைப் பெரிய இலக்கியவாதி என்றோ, மேலான எழுத்தாளன் என்றோ எப்போதும் சொல்லிக்கொண்டதில்லை. அவரை வம்புகிழுத்துக் கிண்டல் செய்வது எத்தனை கீழ்த்தரமான செயல்?

'கருணாநிதி எழுத்துலகில் ஒன்றும் சாதிக்கவில்லை என்பது போல் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு திருவாய் மலர்ந்த இவர் எழுதிய எல்லாமே[சில கதைகளும், சில கட்டுரைகளும் விதிவிலக்கு] எவருக்கும் புரியாத குப்பைகள்தான். வண்டி வண்டியாய் எழுதிக் குவிக்கும் திறமை இருக்கிறதே தவிர, இவர் எழுதிச் சாதித்தது எதுவுமில்லை.

'விஷ்ணுபுரம்' வாசகர் வட்டத்தைச் சேர்ந்த எவரேனும், அந்த நாவலின் 'கரு' பற்றியோ, அதன் பயன் குறித்தோ புரியும் வகையில் எழுதியிருக்கிறார்களா? இல்லைதானே?

'அன்புள்ள ஜெமோ' என்று விளித்து வேறு வேறு பெயர்களில் தானே பாராட்டுக் கடிதங்கள் எழுதி, பக்கம் பக்கமாகப் பதிலும் எழுதிக்கொள்ளும் சாமர்த்தியம் இவரைத் தவிர வேறு யாருக்கு இருக்கிறது?

பழைய பாரதக் கதைக்கு, 'வெள்ளை யானை', 'கறுப்பு'ப் பூனை' என்னும் பெயர்களில் அலுமினிய முலாம் பூசுவதற்கு இவரை விட்டால் வேறு யாரிருக்கிறார்கள்?!

*//கி.ராஜநாராயணன் நூறாண்டு வாழ்ந்தார். அவரை அறிந்தோர் ரமணிசந்திரனின் வாசகர் எண்ணிக்கையில் நூறிலொருவரே இருப்பார்கள். ரமணிச்சந்திரன் இலக்கியவாதி அல்ல, கி.ராஜநாராயணன் இலக்கியவாதி.//

பதில்:ரமணிசந்திரனும்கூட, எபோதுமே தன்னை இலக்கியவாதி என்று சொல்லிக்கொண்டதில்லை. மக்களின் மன உணர்ச்சிகளுக்கும், பலவீனங்களுக்கும் கதை வடிவம் தருகிறார். தெளிவான நடையில் புரியும்படி எழுதுகிறார். இந்தத் தகுதிகள் போதும், அவரை நல்ல இலக்கியவாதி என்று சொல்வதற்கு. இந்தச் செயமோகனைப் போலவும், இவர் பட்டியலிடுகிற இலக்கிய மேதைகளில் சிலரைப் போலவும், மனம்போன போக்கில் கண்டதை எழுதி வாசகரைக் குழப்புவதில்லை...தேவையே இல்லாமல் இந்த ஒப்பீட்டை முன்வைத்து இந்தப் பெண் எழுத்தாளரை இழிவுபடுத்துகிறார் இந்த எழுத்துலக 'வாந்திபேதி'.

//சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு அளிப்பதற்கான ‘கூப்பன்’களை அளிக்க ஒரு திமுக செயல்பாட்டாளர் பணம் வசூல் செய்து எடுத்துக்கொண்டார் என்று பேசப்பட்டது. இவையெல்லாமே முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மேடையில் அறிவித்தவை. ஆனால் அரசாணைகளாக ஆகவில்லை. அரசாணைக்காக எதிர்பார்த்து, பின்னர் நேரில் சென்று கேட்ட பதிப்பாளர்களிடம் "அவர்தான் சொல்கிறார் என்றால் உங்களுக்குத் தெரியவேண்டாமா? அரசிடம் வீடுகட்ட ஏது நிலம்? பெருநகர்நிலமும் வனநிலமும் தவிர சென்னையில் நிலம் எங்கே இருக்கிறது? அரசூழியர் குடியிருப்புக்கே நிலம் தேடிக்கொண்டிருக்கிறோம்” என்று ஸ்டாலின் நிலைமையை விளக்கியதாகச் சொல்வார்கள்//

கேள்வி: இப்படி, ஆதாரம் ஏதும் தராமல் ஸ்டாலினை இழிவுபடுத்திவிட்டு.....

//கொரோனா ஒழிப்பு உட்பட பலதளங்களில் இந்த அரசின் செயல்பாடு மிகச் சிறப்பாக உள்ளது. இதை நேரடியான அனுபவத்தில் இருந்து சொல்கிறேன். இத்தனைத் திறன்மிக்க நிர்வாகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நிதானமும் அன்பும் கொண்ட முதல்வர் என ஸ்டாலின் இன்று தென்படுகிறார். நம்பிக்கையூட்டும் விஷயம் இது. இது நீடிக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன். குறைந்தபட்ச நல்லதேனும் நிகழும் என எண்ணுகிறேன். அவ்வாறெனில் பாராட்டுவதும் அல்லவென்றால் விமர்சிப்பதுமே என் பணி//

என்று பாராட்டுரை வாசிக்கிறார் இவர். எதற்கு இந்த இரட்டை வேடம்? நடுநிலை பிறழாத யோக்கியன் என்று காட்டிக்கொள்ளவா?

கட்டுரையின் தொடக்கத்தில், இலக்கிய விருது குறித்து மட்டுமே விமர்சிப்பதாகக் குறிப்பிட்டுவிட்டு, பரிசுக்குரியவர்கள் என்று ஏராளமான எழுத்தாளர்களைப் பட்டியலிட்டிருக்கிறார். எதற்கு?

புலவர் செ.இராசு, சர் சி.வி.ராமன், கணித மேதை ராமானுஜன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ஜம்புலிங்கம் என்று பிற துறைகளில் சாதித்தவர்களைப் பற்றியெல்லாம் நிறையவே கதைத்திருக்கிறார்.

இந்த இலக்கிய அதிமேதாவிக்கு, தலைப்பை ஒட்டி  எழுதவே தெரியாதோ?!

கட்டுரையின் முடிவில், 'கொஞ்சம் மோசமான ஆணவம் உள்ளவன்' என்று தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்கிறார். 

'புளிச்ச மாவு' நிகழ்வை நினைவுபடுத்துகிறார் போலும்!!

=============================================================================================