'யூடியூப்'இல் பிறிதொன்றைத் தேடி அலைந்து மனம் சோர்ந்த நிலையில், கீழ்க்காணும் 'காணொலி' கண்ணில் பட்டது ஒரு நல்வாய்ப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது.
காணொலியின் இறுதிக் காட்சிவரை மனம் பதறியவாறிருந்தது; மான் காப்பாற்றப்படவேண்டும் என்னும் தவிப்பு கூடிக்கொண்டே போனது.
சிறுத்தையை விரட்டியடித்ததோடு, மானைத் தொட்டுத் தடவி, அது எழுந்து நின்று தள்ளாடி நடந்து செல்வதை இரு கண்களால் கண்டுகொண்டிருக்கும் குரங்கின் வீரச்செயலும், தன் இனத்தைச் சாராத ஒன்றின் உயிர் காக்கும் இரக்கக் குணமும் என்னைப் பெரிதும் நெகிழச் செய்தன; உடம்பு சிலிர்த்தது.
"இந்த ஐந்தறிவு ஜீவனுக்குள்ள உதவும் மனம் ஆறறிவு மனிதர்களில் எத்தனை பேருக்கு உள்ளது?" என்று கேள்வி எழுப்பியது என் உள்மனம்.
'மற்றவர்களுக்கு இருக்கிறதோ இல்லையோ, உனக்கு இருக்கிறதா?" என்று வினவியது என் மனசாட்சி.
பதில் சொல்வது அத்தனை எளிதாக இல்லை எனக்கு!
========================================================================================================================================================================