அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 10 ஜூலை, 2021

தமிழன் துயில்கிறான்! தொட்டு எழுப்பாதீர்!!

தமிழ்நாட்டில் உள்ள 'கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்[499] தமிழ் ஒரு பாடமொழியாககூடக் கற்றுத் தரப்படுவதில்லை. சில ஆயிரவர்கூடப் பேசாத சமஸ்கிருதம் ஒரு பாடமொழி என்பது கட்டாயம்!

இது குறித்து, திருச்சி சிவா அவர்கள் தம் வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்['சன்' தொலைக்காட்சியில்[09.07.2021] 'திருச்சி சிவா' அவர்களின் பேட்டி}.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், தமிழ் பாடமொழி ஆக்கப்படுதல் வேண்டும் என்று நடுவணரசை வற்புறுத்தியிருக்கிறார்[https://www.bbc.com/tamil/india-54948505].

'மதிமுக' பொதுச் செயலாளர் 'வைகோ' அவர்கள், "தமிழகத்தில் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் செம்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்துபோன சமஸ்கிருதத்திற்கு மகுடம் சூட்டுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மேலும், 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழியும் கட்டாயம் என்று ஏற்கனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுத்தி வருகின்றன" என்று தம் மன வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார்[https://tamil.news18.com/news/tamil-nadu/vaiko-says-tamil-should-be-taught-in-kendriya-vidyalaya-schools-sur-408843.html  -FEBRUARY 10, 2021]

இன்னும் பல தமிழினத் தலைவர்களும்['தமிழினம்' என்று சொல்லவும் ஒரு நாள் தடை வருமோ?!] இந்நிலை குறித்து வருந்தியிருக்கிறார்கள்; கண்டித்திருக்கிறார்கள்.

யார் என்ன சொல்லியும் நடுவணரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.

"யார் சொன்னால் மோடி அரசு வழிக்குவரும்?" என்று என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டேன். 'தமிழ்நாட்டு மக்கள் சொன்னால் அது நடக்கும்" என்னும் பதிலும் கிடைத்தது.

மக்கள் சொல்வார்களா?

ஊஹூ...ம்! 'தமிழ், தமிழன், தமிழினம்' என்று பெருமை பேசித் திரியும் குறுகிய மனப்பான்மையிலிருந்து பெரும்பான்மைத் தமிழர்கள் விடுபட்டுவிட்டார்கள்.' -இது 'அவர்களின்' நம்பிக்கை.

ஆகவே, இன்றல்ல, இனி என்றென்றைக்கும் கேந்திரிய வித்யாலயா என்றில்லை, நடுவணரசின் நிர்வாகத்திலுள்ள எந்தவொரு நிறுவனத்திற்குள்ளும் தமிழ் நுழைந்திட[உடனடி மொழியாக்கத்திற்கான கருவிகள் இருந்தும்கூட] இயலாது... இயலவே இயலாது!

அதற்கான தகுதி பெற்ற மொழிகள், 35%[?] மக்கள் பேசும் 'தேச' பாஷை இந்தியும் 'தேவ' பாஷை சமஸ்கிருதமும் மட்டுமே!

====================================================================================

***அதென்னங்க 'கேந்திரிய வித்யாலயா?! தமிழ்நாட்டில் மட்டுமாவது தமிழிலும் மொழியாக்கம் செய்வது பாவமா? நடுவணரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நலத் திட்டங்களுக்கு இந்தியிலேயே பெயர் சூட்டல். மாநில மொழிகள் புறக்கணிப்பு. "இது ஏன்?" என்று கேட்டால், கிடைப்பது 'தேச எதிரி'ப் பட்டம்!

***அறிவீர்களா?.....

"மத்திய அரசால் தமிழ்நாட்டில் நடத்தப்படுகிற பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிப் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசுதான் ஊதியம் வழங்குகிறது." -மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா 

https://www.hindutamil.in/news/tamilnadu/691148-jawahirulla-nehru-urges-appointment-of-tamil-teachers-in-kendriya-vidyalaya-schools.html.