எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 8 ஜூலை, 2021

அமேசான் கிண்டிலில் இது புதுசு!

அமேசான் கிண்டிலில் வெளியாகியுள்ள, என்னுடைய '37'ஆவது  நூல் 'ஓ..... விஞ்ஞானிகளே!' 

நூலின் 08 கட்டுரைகளில் 'ஓ..... விஞ்ஞானிகளே!' முதலாவது; உலக அளவிலான அறிவியல் அறிஞர்களிடம் ஒரு சாமானியன் முன்வைக்கும் புதுமையானதொரு கோரிக்கையை உள்ளடக்கமாகக் கொண்டது.

எஞ்சிய 07 கட்டுரைகளும்கூட படைப்புத் தத்துவங்களின் பயன்பாட்டை இயல்பு வாழ்க்கையுடன் இணைத்து ஆராயும் அரிய முயற்சிதான்.

தத்துவம் என்றாலே, அது வாசகரை எளிதில் சலிப்படையச் செய்வது என்று எண்ணுவோரே நம்மில் மிகப் பலராவர். அவ்வெண்ணம் தவறானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எளிய நடையில் தொய்வில்லாமல் கருத்துகளைப் பதிவு செய்திட முயன்றிருக்கிறேன். 

நீங்கள் கிண்டிலின் சந்தாதாரராக இருப்பின், இந்நூலை இலவசமாக வாசிக்கலாம்.

நன்றி!

ஓ..... விஞ்ஞானிகளே! (Tamil Edition)
Free with Kindle Unlimited membership Learn More

சிற்றின்பமும் சிறு சிறு இன்பங்களும்!
Or ₹74 to buy
============================
செம்மொழி தமிழ் மட்டுமே.....

காணொலி:
https://youtu.be/teP104wjp2w
===========================
உதவி: 'Quora'