இதன் மூலம் உயிரினப் பாலுறவின் தொடக்கத்தைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி உலகோரைப் பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறார்கள் அவர்கள்.
38 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த ''மைக்ரோபிரக்கியஸ் டிக்கி'' என்னும் வகையிலான மீன்களே, முட்டை போடுவதற்குப் பதிலாக முதன் முதலில் பாலுறவின் மூலம் இனப்பெருக்கம் செய்தன என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.
இந்த வகை மீன்களில் ஆண் மீன்களில் காணப்படும் ''L'' போன்ற ஒரு பிற்சேர்க்கை, பெண் மீனின் பின்பகுதியில் எலும்பு போன்ற ஒரு அமைப்புடன் இணைவதன் மூலம் உடலுறவு நிகழ்கிறது.
ஆனால், பின்னர் மீண்டும் முட்டை போடும் முறைக்கே[மீன்கள் முட்டையிட்டு, படிநிலைகளில் குஞ்சுகளைப் பெறுபவை. இவற்றில் ஒரு பாலினக் கருவுறல் உடலினுள்ளோ அல்லது வெளிப்புறத்திலோ நிகழலாம்] அந்த மீன் இனம் மாறிவிட்டதாம்.
[ஆண், பெண் மீன்களில் தனித்தனி ஹார்மோன்கள் சுரக்கின்றன. முட்டையிடுதலின் போது பெண் மீன்கள் நீரில் முட்டைகளை இடுகிற அதே நேரத்தில் ஆண் மீன்கள் அம்முட்டையின் அருகே வந்து விந்தினை வெளியிடுகின்றன. இதன் மூலம் அம்முட்டைகள் தாய் மீனின் உடலுக்கு வெளியில் நீரிலேயே கருவுருகின்றன.]
50 லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னர் சுறா போன்றவற்றிற்கு மீண்டும் உடலுறவு மூலம் இனப்பெருக்கம் செய்யும் தன்மை வந்துவிட்டது என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.
====================================================================================
https://www.bbc.com/tamil/science/2014/10/141020_fishsex