#காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றிய பிறகு, அங்கே கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. ஆப்கான் நாட்டவர்கள், தாலிபான்களின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து அங்கிருந்து தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே[அரிதாக ஓரிரு பெண் குழந்தைகள் தென்படுகிறார்கள்] காணப்படுகின்றனர். அந்த மக்கள் கூட்டத்தில் பெண்கள் இல்லை. அப்படியானால், ஆப்கான் நாட்டில் உள்ள பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில்(Afghanistan) நிலைமை குறித்த ஒரு பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆப்கான் மக்களின் வலியைக் கூறியுள்ளார். உலகம் ஆப்கானிஸ்தான் மக்களை பற்றிக் கவலைப்படவில்லை என்று கூறும் அவர், சில நாடுகள் தலிபான் ஆட்சிக்கு ஆதரவான நிலைப்பட்டை எடுத்துள்ளனர் என மிகவும் வருந்தி அழுவது மனதை உருக்குவதாக உள்ளது.
"We do not count because we were born in Afghanistan . . . We’ll die slowly in history.” I am heartbroken. The women & girls of Afghanistan have been abandoned. What of their dreams, hopes? The rights they have fought two decades for? #PrayforAfghanistan pic.twitter.com/Os6aSRv5RK"
* * *
ஆப்கானிஸ்தானில், ஆட்சியைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டுப் பெண்களின் நிலை கேள்விக்குறியாகி இருக்கும் வேளையில், முதல் பெண் மேயர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்துள்ளார்.
* * *
90-களில் தாலிபான் ஆட்சி இருந்தபோது அனுபவித்த கொடுமைகளை ஆப்கானிஸ்தான் மக்கள் மறக்கவில்லை. அதனால்தான் தாலிபான் கைகளில் முழுமையாக அதிகாரம் செல்வதற்கு முன்பு அவர்கள் எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்கள்.
காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து மக்கள் கூட்டம் காணப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் (Afghanistan) மக்களின் நிலையை விவரிக்கும் ஒரு படம் சமீபத்தில் வைரலானது. இது, பேருந்தில் தொங்கிக்கொண்டு மக்கள் பயணிப்பது போன்றது. பறக்கத் தொடங்கிய விமானத்தில் தொங்கிய மூன்று பேர் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தனர். இந்தக் காட்சி உலகெங்கிலும் உள்ள மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது.
விமானத்திற்குள் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது
இந்தப் புகைப்படத்தைப் பார்த்தால், ஆப்கானிஸ்தானின் கொடூரத்தையும் அங்கிருந்து வெளியேற மக்கள் காட்டும் அவசரத்தையும் எளிதில் யூகிக்க முடிகிறது.