அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

'மனநோய் மரணங்கள்'... தமிழ்நாடு முதலிடம்!


ன அழுத்த நோய் என்பது இந்தியாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது என்கிறது ஆய்வு நடத்திய 'தி லான்செட் சைக்கியாட்' என்னும் அமைப்பு. இது 1990 முதல் இந்த ஆய்வை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இந்திய மக்கள், இயலாமை, தாழ்வு மனப்பான்மை, சோர்வு, எதிலும் நாட்டமின்மை போன்ற மன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,  அதற்கு மிக முக்கியக் காரணம் மன அழுத்தம்தான் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா முழுவதும் ஒரு லட்சம் மக்களில் குறைந்தது 836 பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படிருப்பதாக இது தெரிவித்துள்ளது.

இந்த மன அழுத்தம்தான் இந்தியாவில் ஏராளமான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்ள முக்கியக் காரணம் என்பதை உறுதிப்படுத்துகிறார் மனநல மருத்துவர் ஆர்.தாரா.

'தமிழ்நாட்டு மக்களுக்கும் மனப் பதற்றம் தொடர்பான நோய் அதிகரித்துக் காணப்படுகிறது. இப்படி வளரும் மாநிலங்களின் பாட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டில் மன அழுத்தம் காரணமாக 1,00,000 பேரில் 325 பேர்[ஒட்டுமொத்த இந்தியா 836] மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்கிறது மேற்கண்ட ஆய்வு முடிவு. அதுமட்டுமன்றி இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) மற்றும் மனச்சிதைவு நோயாலும் தமிழக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த அளவானது 1990 முதல் 2017 வரை ஒப்பிடுகையில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாம். 2016ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 4.3 சதவீதம் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

ஒட்டு மொத்த இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் மனநல நோயால் பதிக்கப்பட்டுள்ளனர். அதில் மன அழுத்தம், மனப்பதட்டம், மனச் சோர்வு, மனச் சிதைவு ஆகியவையும் அடக்கம். இதில் மன அழுத்தத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது.

மன நோயைச் சரி செய்யத் தமிழக அரசு தனியார் மையங்களோடு இணைந்து மக்களுக்கு மனநல ஆலோசனைகளை அளித்து வருகிறது. இருப்பினும், அதற்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரித்து  இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும்; விழிப்புணர்வு அளிக்க வேண்டும்; மனநல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அந்த ஆய்வு முன் வைத்துள்ளது.

                                                     *  *  *

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மூன்றும் கணிசமான அளவில்  பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைப் பெற்றிருக்கும் மாநிலங்கள் என்று சொல்லப்படுபவை[வெப்டூனியா]. இருந்தும், இங்கு மனநோய் மரணங்கள் பெருமளவில் இருப்பது ஏன்? இவர்களில் போலிகள் அதிகமோ?!

'இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளமாநிலம் தமிழ்நாடாகும்[விக்கிப்பீடியா]. இருந்து என்ன பயன்? எந்தவொரு சாமியும் பக்தர்களின் மனநோயைக் கண்டுகொள்ளவில்லையே!! ஹி...ஹி...ஹி!!!

============================================================================================

https://tamil.news18.com/amp/news/lifestyle/health-tamil-nadu-tops-in-depressive-disorders-finds-study-esr-240677.html