ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

ஆபாசக் 'காணொலி'களால் அவதிப்படும் பெண்கள்!!!

"மன ஒப்புதலுடன் நிகழும் உடலுறவின்போது பெண்ணை அறைதல், கழுத்தை நெரித்தல், வாயை அடைத்துக் கொள்வது அல்லது துப்புவது போன்ற தேவையற்ற செயல்களுக்கு ஆளாகி இருக்கிறீர்களா? எப்போதாவது அது விருப்பம் இல்லாமல் நடந்திருக்கிறதா?"

இப்படி இரண்டு கேள்விகளைப் பிரிட்டனில் 18 முதல் 39 வயதுக்கு உள்பட்ட 2002 பெண்களிடம் கேட்டு, 'சவன்டா காம்ரெஸ்' என்னும் ஆய்வு நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. 

ஆய்வில் பங்கேற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலானவர்கள் (38%) இதுபோன்ற பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகியுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுபோன்ற அனுபவம் இல்லை என்றோ, இதுபற்றித் தெரியாது என்றோ அல்லது பதில் அளிக்க விரும்பவில்லை என்றோ 31% பேர் குறிப்பிட்டுள்ளனர்.

"இளம்பெண்கள் வெறித்தனமான, அபாயகரமான மற்றும் கண்ணியக் குறைபாடான செயல்களுடன் கூடிய உறவுக்கு நிர்பந்திக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன'' என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன என்று பெண்கள் நீதிக்கான மையத்தின் நிர்வாகிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"இதெல்லாம் உடலுறவின்போது இயல்பானதுதான் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டிருப்பதும், அளவுக்கு அதிகமான ஆபாசப்படங்களைப் பார்ப்பதும்தான் இந்தப் பழக்கம் பரவலாக இருப்பதற்குக் காரணம்'' என்றும் அவர்கள் கூறினார்கள்.

ஸ்டீவன் போப் என்பவர் பாலியல் மற்றும் உறவுமுறைகள் குறித்த உளவியல் நிபுணர்.

இதுபோன்ற செயல்கள் `தினந்தோறும்' அதிகரித்து வருவதன் எதிர்மறைத் தாக்கம் பற்றித் தாம் ஆய்வு செய்து வருவதாகப் பிபிசி ரேடியோ 5 லைவ் செய்தியாளரிடம் அவர் கூறினார்.

"இது மவுனமாகப் பரவும் ஓர் ஆபத்து. இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து அவ்வாறு செய்கிறார்கள். ஆனால், அது மிகவும் துன்பம் தருவதாக இருக்கலாம். உறவு நிலையின் கண்ணியத்தைக் குறைப்பதாகப் பலர் இதைக் கருதுகிறார்கள். இந்த வன்முறை ஏற்கத்தக்கது என்று கருதும் நிலை மோசமானது'' என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், இதில் உள்ள ஆபத்துகள் பற்றி அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆய்வு முடிவுகள் "மிகவும் பயத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன'' என்று இது குறித்த, பிரச்சார அலுவலர் பியோனா மெக்கென்ஜி என்பவர் கூறியுள்ளார்.

"கழுத்தை நெரித்தல் அல்லது வாயை அடைத்தல் என்று எல்லை மீறும்போது `நூலிழையில் உயிர் தப்பிய நிலையில்' பலர் என்னிடம் வருகிறார்கள். நீண்ட நேரம் சுயநினைவிழந்து அவர்கள் இருந்துள்ளனர். கழுத்தை நெரித்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஆனால் அதுபற்றித் துளியும் சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பதில்லை என்பது வருத்தமானது'' என்று சொல்லிப் பெரிதும் கவலைப்படுகிறார் அவர்.

இது, இங்கிலாந்தில் பரவிவரும் ஆபத்தான பாலியியல் நாகரிகம்.

இந்தியாவில் பரவியுள்ளதா?

"இல்லை" என்றால், இனி பரவுமா?

எப்போது?

தடுத்து நிறுத்துவது சாத்தியப்படுமா?

ஊஹூம். கலிகாலம் முடிவுபெற ரொம்ப வருசம் இருக்காமே!!!

====================================================================================

https://www.bbc.com/tamil/global-50593392   

====================================================================================

அமேசானில் 'என் பக்கம்['பசி'பரமசிவம்] செல்ல.....

https://www.amazon.com/author/haipasi