அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

'இவர்கள்' நம்மைவிடவும் முட்டாள்கள்!!!


*சீனா, ஜமைக்கா போன்ற நாடுகளில் முன்னாளில், குழந்தை பிறந்த பிறகு, தாய்மார்கள் அவர்களது தொப்புள்கொடியைச் சாப்பிடும் முறை இருந்ததாம். இது, அவர்களின் உடலுக்கு வலிமையைத் தரும் என்று கருதி இதைச் செய்து வந்துள்ளனர். 

!!!நல்லவேளை, குழந்தையைச் சாப்பிட்டால் தீர்க்காயுசா வாழலாம்னு மூதாதையர் சொல்லிவைக்கவில்லை.

*ஸ்காட்லாந்து நாட்டில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஒரு சடங்கில், மணமக்களை வரவழைத்து, அவர்கள் மீது முட்டை, பால், போன்ற பல பொருட்களை வீசி வேடிக்கை பார்த்து மகிழ்வது ஒரு கொண்டாட்டமாம். இதற்குப் பிறகு அவர்கள் குளித்துவரும்போது, புதிதான வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டனர் என்று பொருள். அவர்களால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் கையாள முடியும் என நம்புகின்றனர். 

!!!முட்டை, பால் எல்லாம் வீணடிக்காம, சாப்பிடக் கொடுத்து உடம்பைத் தேத்தினா, தெம்போடு முதலிரவு கொண்டாடுவாங்களே?

*மடகஸ்கார் பகுதியில் வாழ்ந்துவரும் 'மலகாஸி' எனும் மலைவாழ் மக்கள் கொண்டாடும் சடங்கின் பெயர் 'ஃபமதிஹனா'[Famadihana]. இந்தச் சடங்கில் இவர்கள் இறந்த உடலோடு நடனமாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இறந்தவரின் வீட்டில் இருந்து சடலம் மயானத்திற்குக் கொண்டுவரப்பட்டு, புதுத் துணியால் போர்த்து இவர்கள் இந்தச் சடங்கினைச் செய்கிறார்கள். 

!!!"ஆடியடங்கும் வாழ்க்கையடா!" என்றார்கள் நம் முன்னோர்கள். "அடங்கிய பிறகும் தன் ஆட்டத்தை மனுசன் நிறுத்தமாட்டான்" என்கிறார்கள் மடகஸ்கார் மக்கள்.

*எகிப்தில் உப்பு கேட்கக் கூடாது. ஒருவேளை நீங்கள் எகிப்தில் யாரவது வீட்டிற்கு விருந்தினராகச் சென்றால், அந்த விருந்தின்போது, உணவில் உப்புச் சேர்க்க உப்பு கேட்பதை அல்லது, உப்பை நீங்களே எடுத்துப் பயன்படுத்துவதை அவர்கள் அவமரியாதையாகக் கருதுகின்றனர்.  

!!!"உப்புக் கொடுக்கக்கூட எங்களுக்குத் துப்பில்லை. பெரிதாக எதுவும் கேட்டுவிடாதீர்கள்" என்று சொல்லாமல் சொல்கிறார்களோ?

*ஜெர்மனியில், திருமணத்திற்கு முந்தையதாக ஒரு சடங்கு நடக்கிறது. அந்தச் சடங்கின்போது, மணமகன், மணமகள் வீட்டார்கள் வந்து பீங்கான் பாத்திரங்களை உடைத்துவிட்டுச் செல்வார்களாம். அதை, மணமக்கள் ஒன்றாகச் சேர்ந்து சுத்தம் செய்ய வேண்டுமாம். இது, இவர்கள் இருவரையும் ஒருங்கிணைந்து வாழவும், ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மை வளரவும் செய்யும் என்பது அவர்களது நம்பிக்கை. 

!!!ஜோடி சேர்ந்த புதுசு. 'குஷி' மூடில் இருப்பாங்க. இதென்ன, கொடுக்கிற வேறு எந்த வேலையையும் குறை வைக்காம செய்வாங்க.

*கர்நாடகத்தில் உள்ள சண்டேஸ்வரர் கோவிலில், பிறந்த குழந்தையை அதிர்ஷ்டத்திற்காக ஐம்பது அடி உயரத்தில் இருந்து தூக்கி எறிந்து, குடும்பத்தார் கீழ் நின்று ஒரு துணியை அகல விரித்துப் பிடிப்பார்களாம். 

!!!பிறந்தது பெண் குழந்தைன்னா, துணியை விரிச்சிப் பிடிக்காம சுருட்டிப் பிடிப்பார்களோ?

*பாங்காக்கில், வருடத்திற்கு ஒரு முறை தாய்லாந்தில் 3,000 கிலோ பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைக் குரங்குகளுக்கு விருந்தாக வைப்பார்கள். 

!!!அதென்ன குரங்குகளுக்கு மட்டும்? அதுகள் நம் மூதாதையர் என்பதாலா?

*முஹர்ரம் முஹம்மதுவின் பேரன் ஹுசைனின் இறப்பிற்கு அஞ்சலி / நன்றி செலுத்தும் வகையில் தங்களைத் தாங்களே ஒரு முள் சங்கிலியைக் கொண்டு துன்புறுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம் மக்கள். இது தங்களுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு நன்றி செலுத்தும் முறை என்று கூறினாலும் சற்று வினோதமாக இருக்கிறது. இஸ்லாமிய நாடுகளில் இந்தச் சடங்கு முறை பின்பற்றப்படுகிறது. 

!!!அதென்ன தங்களைத் தாங்களே? அடுத்தவங்ககிட்ட சங்கிலியைக் கொடுத்தா ரொம்ப ரொம்ப வலிக்கிற மாதிரி அடிச்சிடுவாங்களோ?

*ரோம் நாட்டில், செத்தவர்களுக்கு உணவூட்டும் சடங்கு ஒன்று இருக்கிறது. அங்குள்ள சமாதிகளில் குழாய்கள் இருக்குமாம். அதன் வழியாகத் தேன், ஒயின், உணவுப் பொருள்கள் போன்றவற்றை ஊட்டுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். 

!!!வறுமையில் உயிரோடு செத்துக்கொண்டிருப்பவர்களுக்கு இதெல்லாம் ஊட்டுவார்களா?

*பிரேசிலில் இருக்கும் யோனமமோ (Yonamamo) எனும் மலைவாழ் மக்கள், தங்களுடன் வாழ்ந்துவந்த பிரியமானவர்கள் இறந்த பிறகு அவர்களது உடலின் சாம்பலைச் சாப்பிடுவதை ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர். இதன் மூலம், அவர்கள் தங்களைவிட்டுப் பிரியவில்லை என இவர்கள் நினைத்துக் கொள்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தச் சாம்பலைச் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

!!!எரித்தால் சாம்பல் சாப்பிடுகிறார்கள். குழி தோண்டிப் புதைக்கிறதா இருந்தா, குடலை உருவிச் சாப்பிடுவாங்களோ?

*ஸ்காட்லாந்து நாட்டில், திருமணத்திற்கு முன்பு நடக்கும் ஒரு சடங்கில், மணமக்களை வரவழைத்து, அவற்கள் மீது முட்டை, பால், போன்ற பல பொருட்களை வீசிக் கருப்படிப்பது ஒரு கொண்டாட்டமாம். இதற்குப் பிறகு அவர்கள் குளித்துவரும்போது, புதிதான வாழ்க்கைக்குத் தயாராகிவிட்டனர் என்று பொருள். அவர்களால் எந்தப் பிரச்சனைகளையும் எளிதாகக் கையாள முடியும் என நம்புகின்றனர். 

!!!முட்டை, பால் எல்லாம் வீணடிக்காம, சாப்பிடக் கொடுத்து ரெண்டு பேருடைய உடம்பையும் தேத்தினா 'தெம்போடு' முதலிரவு கொண்டாடுவாங்களே?

*இந்தோனேசியாவில், டானி (Dani) எனும் மலைவாழ் மக்களின் மத்தியில் வழக்கத்தில் உள்ள ஒரு சடங்கு வினோதத்தின் உச்சக்கட்டமாய் இருக்கிறது. வீட்டில் யாரவது ஒருவர் இறந்துவிட்டால் அவர்களது விரல்களைத் துண்டித்துக் கொள்வார்களாம். இப்படி ஒவ்வொருவர் இறக்கும்போதும் செய்கின்றனர். 

!!!விரல் போனா சமாளிச்சுக்களாம். வேறு அதி 'முக்கிய' உறுப்புன்னா... யோசிக்கும்போது ஒட்டுமொத்த உடம்பும் 'கிடு கிடு'ன்னு நடுங்குது.

*சீனாவில், கர்பிணிப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு கணவன் தீ மிதித்தால், அவளது பிரசவம் வலியின்றி இருக்கும் என்று நம்பப்படுகிறது.  

!!!அவளோடு நெருப்பில் விழுந்து தொலைச்சா, சுகப்பிரசவம் சோகப் பிரசவம் ஆயிடுமே?

*அமெரிக்காவின் 'நார்த் போர்னே' எனப்படும் மலைப்பகுதியில் திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆனதும் மூன்று நாட்கள் வெளியே செல்லக்கூடாது. இவ்வாறு செய்வதால், அந்தத் தம்பதியினரின் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

!!!மூனு நாளென்ன, ஒரு முப்பது நாளாவது யாரும் இடைஞ்சல் பண்ணாம வீட்டில் தனியாக விட்டுட்டா அவங்க வாழ்க்கை 'அது' விசயத்தில் அமர்க்களமா இருக்குமே?

*ரொமானியா நாடோடிகள் வாழ்க்கையில், ஒரு பெண்ணைக் கடத்தி மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை வைத்திருந்து திருமணம் செய்யும் முறை இருந்திருக்கிறது. இது, அவன் அந்தப் பெண்ணை வென்றான் என்பதற்கான அடையாளமாம். 

!!!அந்த மூன்று முதல் ஐந்து நாட்களில் 'தப்புத் தண்டா' ஏதும் நடந்திருக்காதுதானே?

====================================================================================

https://tamil.boldsky.com/insync/pulse/2015/weird-customs-from-across-the-world/articlecontent-pf46881-008534.html