#1921இல் சமஸ்கிருத மாநாடு.
அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில் முக்கிய விருந்தினராகச் சென்னை மாகாணத்தின்(தென்னிந்தியாவின் பல பகுதிகளை உள்ளடக்கியது) முதலமைச்சர் 'பனகல் அரசர்' கலந்து கொண்டார். விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
விழா நிறைவு பெற்றவுடன் முதலமைச்சர் பனகல் அரசர் சென்னைக்குப் பயணமானார்.
வருகின்ற வழியில்.....
“மருத்துவப் படிப்பில் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருக்கிறது அல்லவா?” என்று தன் உதவியாளரிடம் கேட்டார்
“ஆம் ஐயா” என்று உதவியாளர் சொல்லியிருக்கிறார்.
“மருத்துவத்துக்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன சம்பந்தம்” என்று பனகல் அரசர் கேட்க, "தெரியவில்லை ஐயா” என்று அவர் பதில் சொல்லியிருக்கிறார்.
“மருத்துவத்திற்குச் சம்பந்தமில்லாத சமஸ்கிருதப் பாடம் தேவையில்லை” என்று சொன்ன அவர்.....
“வீட்டுக்குச் செல்ல வேண்டாம். தலைமைச் செயலகம் செல்லலாம்" என்றார்.
தலைமைச் செயலகம் சென்றவுடன், அலுவலர்களை அழைத்து, “மருத்துவப் படிப்புக்கு இனி சமஸ்கிருதம் என்ற ஒரு பாடம் தேவையில்லை. இன்று முதல் அது நீக்கப்படுகிறது என்ற ஆணையை வெளியிட்டு, உடனடியாக நடைமுறைப் படுத்துங்கள்” என்று உத்தரவிட்டார்.
அடுத்த நாள் காலை, நாளிதழ்களில் தலைப்புச் செய்தியே இதுதான். அதற்கு மிகுந்த எதிர்ப்பு வந்தபோதிலும், சமஸ்கிருதம் மருத்துவப் படிப்பில் இருந்து வெற்றிகரமாக நீக்கப்பட்டது#
* * *
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி இது. அவருக்கும், https://minkaithadi.com/5659/ தளத்திற்கும் நம் நன்றி.
முழு உரையையும் கேட்பதற்கு, கீழ்க்காணும் முகவரிக்குச் செல்க.
====================================================================================