இவரின் 'கொங்குத் தமிழ்' கலந்த பேச்சு கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்[ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்]. எடுத்துக்காட்டுக்குக் கீழ்வரும் பத்தி மட்டும்.
#நினைப்பது எல்லாம் நடக்குமா என நினைத்தால் நடப்பதில்லை. எதெல்லாம் நடக்கக் கூடாது என நினைக்கிறோமோ அதெல்லாம் நடந்துவிடுகிறது. மனைவியோ காதலியோ, தான் சொல்வதற்கெல்லாம் ஆண்கள் தலையாட்ட வேண்டும் என்று நினைப்பார்கள் பெண்கள். ஆனால் ஆண்களோ, நமது மனைவியோ காதலியோ சண்டைக்குப் பிறகு பேசிவிடுவார்களா என எதிர்பார்ப்பார்கள். அப்பாவியான ஒரு வாழ்க்கையும் வேண்டாம். "அடப் பாவி" என்று சொல்லும் வாழ்க்கையும் வேண்டாம். "அப்பாடா" என பெருமூச்சு விடக்கூடிய அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட்டால் போதும் என்பதுதான் 90 சதவீத மக்களுடைய எதிர்பார்ப்பு ஆக உள்ளது.#
'கரூர் லயா'வின் ஓர் அசத்தல் 'பத்[க்]தி'க் கதை
#ஒரு கோயிலில் ஒரு பிச்சைக்காரர் பிச்சை எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதிக அளவில் காசுகள் கிடைக்கவில்லை என்பதால், கோயிலுக்குப் போவதை நிறுத்தி ஒரு டாஸ்மாக் கடை முன்பு உட்கார்ந்தார். அங்கு அவருக்கு நல்ல வருமானம் கிடைத்தது, கூடவே மதுவும் கிடைத்தது. அகமகிழ்ந்த அந்தப் பிச்சைக்காரர் கடவுளை நினைந்து சொன்னாராம்: "கடவுளே, நீ இங்கேயா(டாஸ்மாக் கடையில்) இருக்குற? நான் கோயிலில் இருப்பதாக நினைத்தேனே"#
'கரூர் லயா'வுக்கு நன்றி.
====================================================================================
https://tamil.oneindia.com/news/karur/tiktok-laya-plunges-into-protest-in-dindigul-who-is-she/articlecontent-pf579734-429088.html -Thursday, August 5, 2021, 15:34 [IST]