அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 5 ஆகஸ்ட், 2021

கூகுள்[Blogger] தந்த திடீர் அதிர்ச்சியும், திகைப்பூட்டிய தீர்வும்!!!


03.08.2021இல் 'கடவுளின் கடவுள்!!! https://kadavulinkadavul.blogspot.com'  என்னும் என் வலைப்பக்கத்தில் உள்நுழைய முயன்றபோது அது முடக்கப்பட்டிருப்பதை அறிந்து துணுக்குற்றேன். பெரியதொரு 'பூட்டு'ப் பொம்மையுடன், அது பூட்டப்பட்டுள்ளதாக, கூகுள்[பிளாக்கர்] தெரிவித்தது; மின்னஞ்சலும் அனுப்பியிருந்தது. 

#Blogger ஆக. 3, செவ்., பிற்பகல் 2:34 (2 நாட்களுக்கு முன்) பெறுநர்: எனக்கு வணக்கம், Bloggerரில் என்னென்ன அனுமதிக்கப்படுகின்றன என்னென்ன அனுமதிக்கப்படவில்லை என்பது தொடர்பான வரைமுறைகளை எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் (https://blogger.com/go/contentpolicy) விளக்குகின்றன, இவை உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். "http://kadavulinkadavul.blogspot.com/" என்ற உங்கள் வலைப்பதிவு நாங்கள் மதிப்பாய்வு செய்வதற்காகக் கொடியிடப்பட்டது. இது எங்கள் வழிகாட்டுதல்களை மீறுகிறது எனத் தீர்மானித்து http://kadavulinkadavul.blogspot.com/ என்ற URLலை வெளியிடவில்லை. இது வலைப்பதிவின் வாசகர்களுக்குக் கிடைக்காது. உங்கள் வலைப்பதிவு ஏன் அகற்றப்பட்டது? உங்கள் இடுகையின் உள்ளடக்கம் எங்கள் PHISHING கொள்கையை மீறியுள்ளது. இதைப் பற்றி மேலும் அறிய, இந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டுள்ள எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் பக்கத்தைப் பார்க்கவும். வலைப்பதிவின் உள்ளடக்கம் எங்கள் கொள்கையின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவில்லை என நாங்கள் எண்ணினால் அந்த வலைப்பதிவைப் பொதுவில் கிடைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம். நாங்கள் தவறு செய்ததாக நீங்கள் கருதினால் https://www.blogger.com/unlock-blog.g?lockedBlogID=8564301289318509452 என்ற தளத்திற்குச் சென்று மதிப்பாய்வைக் கோரலாம், அதை மீண்டும் மதிப்பாய்வு செய்வோம். இப்படிக்கு, -Blogger குழுவினர்.# 

பிளாக்கர் குறிப்பிட்டுள்ள முகவரிக்குச் சென்று உரிய செயல்முறைகளைக் கையாண்டேன். 4 மணி நேர இடைவெளிக்குப் பின்னர்[பிற்பகல் 07.00] பூட்டப்பட்டிருந்த என் தளம் மீண்டும் திறக்கப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. இது தொடர்பாகப் பிளாக்கர் அனுப்பிய மின்னஞ்சல்: 

#Blogger ஆக. 3, செவ்., பிற்பகல் 6:35 (2 நாட்களுக்கு முன்) பெறுநர்: எனக்கு வணக்கம், Bloggerரின் சமூக வழிகாட்டுதல்களின்படி (https://blogger.com/go/contentpolicy) உங்கள் வலைப்பதிவை மறுஆய்வு செய்துள்ளோம். மதிப்பாய்விற்குப் பிறகு வலைப்பதிவு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. http://kadavulinkadavul.blogspot.com/ என்ற தளத்திற்குச் சென்று வலைப்பதிவை நீங்கள் அணுகலாம். புரிந்துகொண்டமைக்கு நன்றி. உண்மையுள்ள, Blogger குழு

*தளத்தைக் கையாளுதற்குப் பிளாக்கர் அனுமதித்ததன் மூலம், அதன் உள்ளடக்கக் கொள்கையை நான் மீறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆயினும், உள்ளடக்கக் கொள்கையை நான் மீறியதாகக் கருதி, சில மணி நேரம் தளத்தை அது முடக்கியதற்கான காரணத்தை என்னால் அறிய இயலவில்லை. 

எவரேனும் புகார் அளித்திருக்கலாம். புகார் அளித்தவர் பற்றியும், புகாருக்கான காரணம் பற்றியும் புகாருக்கு உள்ளானவர்களுக்கு கூகுள் தெரிவிப்பதில்லை [என் மீது புகார் தெரிவிக்கும் அளவுக்குத் தனிப்பட்ட முறையில், அநாகரிமாக எவரையும் நான் விமர்சித்ததில்லை என்பது என் நம்பிக்கை] என்பதைப் பதிவர்கள் பலரும் அறிந்திருக்கக்கூடும். 

எது எப்படியோ, நடுநிலையுணர்வுடன் என் வலைப்பதிவை மதிப்பீடு செய்து, தொடர்ந்து அதைப் பயன்படுத்த அனுமதித்த கூகுளுக்கு என் நன்றியைத் தெரிவித்துள்ளேன்; மீண்டும் தெரிவிக்கிறேன்[இத்தகையதொரு அனுபவத்தை நான் பெற்றிடக் காரணமாக இருந்தவருக்கும்/இருந்தவர்களுக்கும் என் நன்றி]

நன்றி... நன்றி... மிக்க நன்றி!
====================================================================================
***பதிவுலக நண்பர்களின் அறிதலுக்காகவே இந்தப் பகிர்வு.