வெள்ளி, 3 செப்டம்பர், 2021

கலப்பு முன்னே! இனப்பெருக்கம் பின்னே!!

[ஒட்டு மாம்பழம்]

ரஷியன் தொல்பொருள் ஆய்வாளர்கள் 'டெனிசோவா' மலைகளில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எலும்புத் துண்டைக் கண்டறிந்தனர். அந்த எலும்பை ஆய்வு செய்ததில் அது இருவேறு உயிரினங்களின் கலப்பில் பிறந்த குழந்தை என்று தெரியவந்தது என்கிறார்கள் அவர்கள்.

"அது நீண்ட எலும்பின் ஒரு பகுதியாகும், அந்த எலும்புக்கு உரியவருக்கு தோராயமாக 13 வயது இருக்கும் என்று மதிப்பிடலாம்" என்று சொல்கிறார் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பென்ஸ் ஒயோலா  என்னும் ஆய்வறிஞர்.

குகையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகளின் மரபணுக்களில் இருந்து அந்தப் பெண் குழந்தையின் தாய் நியாண்டெர்தல் (Neanderthal) என்றும், தந்தை டெனிசோவன் (Denisovan) இனத்தை சேர்ந்தவர் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

அந்தக் குகை 'ரஷ்யா' நாட்டில் உள்ளதாம். மேற்கண்ட இருவேறு இனங்கள் ஜோடி சேர்ந்ததால் கலப்பினக் குழந்தை பிறந்தது, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வாக இது இருக்கலாம் என்பது அவர்களின் கணிப்பு[கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் நியாண்டெர்தல் (Neanderthal) இனம் பரவியதாக நம்பப்படுகிறது. இன்றைய மக்களில் ஆப்பிரிக்கர்களைத் தவிர்த்து அனைத்து மனிதர்களின் மரபணுக்களிலும் மிகச்சிறிய விகிதத்தில் நியாண்டெர்தல்களின் மரபணு காணப்படுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.

சைபீரியாவின் அல்தாய் மலைகளில் உள்ள டெனிசோவா குகையில், நியாண்டெர்தல் மற்றும் டெனிசோவன் இனங்களின் புதைபடிவச் சான்றுகள் இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.

இதே போல.....

20க்கும் குறைவான பழங்கால மனிதர்களில் அவர்கள் வெவ்வேறு இனங்களின் கலவையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வையும், இது போன்ற பிற ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், "நமது பரிணாம வரலாற்றின் மூலம், இன்றைய மனிதர்கள் வெவ்வேறு இனங்களின் கலப்பில் உருவானவர்கள் என்பது உறுதியாகிறது" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த உண்மை இன்று வாழும் மனிதர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? தெரிந்தால்.....

'என் மதம்... என் இனம்... என் ஜாதி...' என்று வேறு வேறு குழுக்களாகப் பிரிந்து மோதிக்கொள்வதையும், சமர் புரிந்து பெரும் எண்ணிக்கையில் செத்தொழிவதையும் இனியேனும் தணிக்க முடியும்! முற்றிலுமாய்த் தவிர்க்கவும் இயலும்! 

                                    *  *  *

***ஆதாரக் கட்டுரை சுருக்கப்பட்டு, எளிய தெளிவான நடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

====================================================================================

நன்றி: https://www.bbc.com/tamil/science-45302701