கூடல் சுகத்திற்குப் பின்னர், கூடுதலாகவோ குறைவாகவோ ஓர் இடைவெளிக்குப் பின்னரே மீண்டும் இணைந்து இன்பம் துய்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன மிக மிகப் பெரும்பாலான உயிரினங்கள்.
சிறு சிறு இடவெளிகளில் ஊணுறக்கமின்றி மீண்டும் மீண்டும் மீண்டும் பாலுறவு சுகம் அனுபவித்து முடிவில் மரணத்தைத் தழுவும் ஓர் உயிரினம் உண்டென்றால் நம்ப முடிகிறதா?
நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆன்டெச்சினஸ்[Antechinus mouse] சுண்டெலி எனப்படும் ஓர் உயிரினம் அவுஸ்திரேலியாவின் நியூகினியா, டஸ்மேனியா ஆகிய இடங்களில் காணப்படுகிறதாம்.
ஆண் சுண்டெலி, பிறந்து 11 மாதங்களாகும்போது பாலியல் ரீதியாகப் பருவமடைகிறது. அப்பொழுது அதற்கான பாலியல் ஹோர்மோன்கள் சுரக்கின்றன.
புணர்ச்சி வேட்கை அரும்பிப் பெருக்கெடுத்து உச்சநிலையை அடையும்போது பெண் சுண்டெலியைத் தேடி இரவெல்லாம் அது அலையும்.
துணை கிடைத்துவிட்டால், பாலியல் செயல்பாடு ஒரு நாளில் 12 மணி அளவுக்கு நீடிக்கும். இந்தச் செயல்பாடு ஒரு நாளுடன் முடிந்துவிடுவதில்லை. ஊணும் உறக்கமும் இன்றி, ஏன், நீர் அருந்துவதுகூட இல்லாமல் 4 நாட்கள்வரை தொடருமாம்.
நான்கு நாட்களுமே புணர்ச்சி புணர்ச்சி புணர்ச்சி மட்டுமே. விளைவு.....
படிப்படியாக உடல் வலிமை குன்றிய நிலையில் ஆண் எலி கட்டாந்தரையில் சரிந்து விழும்; மரணத்தைத் தழுவும்.
மரணத்தைத் தழுவுவோம் என்பதைக்கூட அறிந்துணர இடந்தராத வெறித்தனமான வேட்கை இந்த அற்ப ஆன்டெச்சினஸ்[Antechinus mouse] சுண்டெலி இனத்துக்கு மட்டும் வாய்த்தது ஏன் என்கிறீர்களா?
யாருக்குத் தெரியும்?
அவன்[கடவுள்] அன்றி வேறு யாரறிவார்?! ஹி... ஹி... ஹி!!!
==========================================================================நன்றி: https://hainalama.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/