'நாசாவின் 'சந்திரா எக்ஸ்-ரே' வான் ஆய்வகத்தின் அலுவல்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியியாகியிருந்தது.' அந்தப் படம்.....
சிவப்பாகவும், நீலமாகவும், கறுப்புவெள்ளையாகவும் திட்டுத்திட்டான சிறு சிறு மேகங்கள் போல ஏதோதோ தெரிகின்றன. இதற்கு மேலும் விளக்கம் தருவது நமக்கு இயலாத ஒன்று.
நம் பக்த சிரோன்மணிகளோ, இங்கே 'தங்கத்தால் ஆன கடவுளின் கை[Hand of God] தெரிவதாகச் சமீக ஊடகங்களில் 'அலப்பறை' செய்கிறார்களாம்[அடர் மஞ்சள் நிறத்தில் ஐந்து விரல்கள் போல் தோன்றும் பகுதியை கடவுளின் கை என்கிறார்களோ?!?!].
'bbc' செய்தி ஊடகத்தில் https://www.bbc.com/tamil/science-58717442 -28 செப்டெம்பர் 2021] இதை வாசித்தபோது.....
"சாத்தானின் கை' என்று எவருக்கும் தோன்றவில்லையா?!"
"கையைக் காட்டிய கடவுள் ஏன் கால்களையோ கருணை வழியும் கண்களையோ, வேறு பிற உறுப்புகளையோ, ஒட்டுமொத்த உடம்பையோ காட்டவில்லை?"
"கடவுளின் கைகளை முன் எப்போதாவது பார்த்தவர் உண்டா?"
"கடவுளின் கையாகவே இருந்தாலும் அதனால் மனித இனத்துக்கோ, பிற உயிரினங்களுக்கோ என்ன நன்மை?"
"இவர்களின் மண்டையில் இருப்பது மூளையா, களிமண்ணா?"
என்றிவ்வாறெல்லாம் கேட்கத் தோன்றியது.
தான் மட்டும் முட்டாளாக இருந்தால் போதாது, சக மனிதர்களும் அவ்வாறே இருந்திடல் வேண்டும் என்று ஆசைப்படுகிற அறிவுசூன்யங்களுக்காகவே, படத்தில், தங்கத்தால் ஆன கை போன்று தெரிகிற 'ஒளி மூட்டம்' பற்றி, அதன் 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது 'நாசா' ஆய்வகம்.
#விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறிய பின்பு உருவான, 'பல்சர்'(துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாகத் தெரிகிறது.#
[கூடுதல் விளக்கத்திற்கு மேலே இடம்பெற்றுள்ள 'பிபிசி' முகவரிக்குச் செல்க].
=================================================================================