இந்நிலையில், நிர்வாண விரும்பிகளுக்காக, பாரிஸ் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் 'போயிஸ் டி வின்சென்ஸ்' என்ற இடத்தில், கால்பந்து மைதான அளவிற்கு ஒரு நிர்வாணப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
முகம் சுளிப்பவர்களுக்கு ஒரு நிர்வாண விரும்பி அறிவுறுத்துவது.....
"நிர்வாணத்தைப் பாலியல் கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது."
"இது உண்மையான ஆனந்தம். நிர்வாண விரும்பிகளுக்கு இது இன்னுமொரு சுதந்திரம்" என்று பாரிஸ் நிர்வாண விரும்பிகள் சங்கத்தை[நம் நாட்டில் இது மாதிரியான சங்கம் தொடங்குவது எப்போதோ?!]ச் சேர்ந்த 'ஜூலியன் க்ளாட்-பெனெக்ரி' ஏஃப்பி[?] செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
"இது இயற்கையை மதித்து அதற்கு மரியாத செலுத்தும் செயல்" என்றும் அவர் கூறியிருக்கிறார்.
"பொது இடங்களைப் பயன்படுத்துவதில், எங்கள் திறந்த மனதுடைய பார்வையின் ஒரு பகுதியே இது" என்று பூங்காக்களை நிர்வகிக்கும் துணை மேயர் 'பெனிலோப் கோமிட்ஸ்' என்பவர் கூறியுள்ளார்.
"இந்தப் பூங்காவில் வேண்டுமென்றே பாலுறுப்புகளை வெளிப்படுத்துவது, மற்றவர்களின் நிர்வாணத்தைப் பார்த்துக் களிப்படைவது போன்றவற்றைச் சகித்துக்கொள்ள முடியாது" என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்களாம்.
பிரான்ஸ் போகிற போக்கைப் பார்த்தால், அங்கே நிர்வாண உடற்பயிற்சிக்கூடம், நிர்வாணக் கல்வி நிலையங்கள்[இருபாலருக்கானவை உட்பட], நிர்வாண மருத்துவமனைகள் எல்லாம் திறக்கப்படக்கூடும் என்பது அடியேனின் அனுமானம்.
இவர் மாதிரியான பத்தாம்பசலி அரசியல்வாதிகள் பிரான்சில் ஆட்சிபீடம் ஏறினால், மேற்கண்ட நிர்வாண விடுதிகள், நிர்வாண நீச்சல் குளங்கள், நிர்வாணப் பூங்கா என்று அனைத்திற்கும் தடை விதிப்பார்கள்.
ஆகவே, நிர்வாண மனிதர்களையும், 'மனிதி'களையும் நேரில் கண்டு ரசித்து இன்புற விரும்புகிறவர்கள் இப்போதே ஃபிரான்சுக்குப் பயணம் மேற்கொள்வது நல்லது!
==========================================================================