#'ஜெய் பீம்' திரைப்படம் தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தங்கள் சமூகத்தை இந்தப் படம் காயப்படுத்தி விட்டதாகக் கூறி பாமகவினர் சூர்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சூர்யாவைத் தாக்கினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டும் என்று அறிவித்துள்ளதுடன், 'அவர் 5 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும்' என்றும் பாமக வழக்குத் தொடுத்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சூர்யாவுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று அமைப்புகள் பலவும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில்,.....
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான 'பசும்பொன் பாண்டியன்' 'பாமக'வை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில்.....
"டாக்டர் ராமதாஸின் தவறான அரசியல் முடிவுகளால் பாமக என்ற கட்சியே கரைந்துவிட்டது. ராமதாஸ் எந்த மக்களுக்காகக் கட்சி ஆரம்பித்தாரோ அந்த மக்களையே அவர் ஏமாற்றி வருகிறார். 10.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தருவதாகக் கூறி அவர் வன்னியர்களுக்குத் துரோகம் செய்துள்ளார்.
அந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அந்த மக்களுக்குக் கிடைக்காது என்று அவருக்கு நன்கு தெரியும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி 10.5 சதவீத இட ஒதுக்கீடு அறிவிப்பைச் செய்யவைத்தார். அதேபாணியில் தொடர்ந்து அனைத்தையும் மிரட்டிச் சாதித்துவிடலாம் என அவர் தப்புக்கணக்குப் போடுகிறார்" என்று கூறியிருக்கிறார்.# -https://tamil.asianetnews.com/politics/entire-south-district-stands-behind-the-surya-if-u-cane-touch-suriya-pasumpon-pandian-warning-to-ramadas--r2re3m
==========================================================================
நன்றி: பசும்பொன் பாண்டியன் அவர்கள்.
பேட்டி: