திங்கள், 22 நவம்பர், 2021

காடுவெட்டி குரு[எ]குருநாதன் 'குருமூர்த்தி' ஆனது எப்படி?!?!

'காடுவெட்டி குரு என்றழைக்கப்படும் செ. குரு என்கிற செ. குருநாதன் (ஆங்கில மொழி: J. Gurunathan) தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.'

காடுவெட்டி குரு (எ) செ. குருநாதன்
Kaduvetti J. Guru.jpg
மாநில வன்னியர் சங்க தலைவர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001-2006
முன்னவர்ராஜேந்திரன்
பின்வந்தவர்எஸ். எஸ். சிவசங்கர்
தொகுதிஆண்டிமடம்
பதவியில்
2011-2016
முன்னவர்கே. இராசேந்திரன்
பின்வந்தவர்இராமஜெயலிங்கம்
தொகுதிஜெயங்கொண்டம்

ஆதாரம்:

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81

                                             *  *  *

காடுவெட்டி குரு அவர்களின் இயற்பெயர், 'குருநாதன்' என்பதை மேற்கண்ட ஆதாரத்தின் மூலம் அறிந்திட முடிகிறது.

'ஜெய் பீம்' திரைப்படத்தில் இடம்பெறும் 'வில்லன்' பெயர் 'குருமூர்த்தி ஆகும்[ஆதாரங்கள் கீழே].

யாரோ ஒரு குருமூர்த்தியை வில்லன் ஆக்கினால் வன்னியர் சங்கத்தவருக்கு ஏன் வலிக்கிறது?

வில்லன் குருமூர்த்தி, 'குருநாதன்' அல்ல.

அப்புறம் எப்படி மறைந்த வன்னியர் இனத் தலைவரான காடுவெட்டி குரு[நாதன்]வைத்தான் 'எஸ்.ஐ' 'குருமூர்த்தி'யாக உருவகப்படுத்தி இழிவுபடுத்தியிருக்கிறார் சூர்யா என்று அவர்கள் சொல்கிறார்கள்? போராடுகிறார்கள்?!

'குருநாதன்' என்னும் முழுப்பெயரை மறைத்து, 'காடுவெட்டி குரு'வைக் 'குருமூர்த்தி' ஆக்கி[ஆக்கியவர்கள் வன்னியர் சங்கத்தவரே],  வில்லனாகச் சித்திரித்திருக்கிறார்கள் 'ஜெய் பீம்' படக் குழுவினர் என்று ஆளாளுக்குச் சாடுவதும், சூர்யாவை மிக மிகக் கீழ்த்தரமாகத் திட்டித் தீர்ப்பதும், தலையை வெட்டுவோம், கைகால்களை உடைப்போம் என்று வெறித்தனமாகப் பேசித் திரிவதும் மிகக் கடுமையான தண்டனைக்குரியவை.

இந்தத் தவறான போக்கு, பிற சமுதாயத்தவரிடம் மட்டுமல்லாமல், வன்னியச் சமுதாய மக்களிடமும் சங்கத்தினர் மீதான மரியாதையை வெகுவாகக் குறைக்கும் என்பதை அவர்கள் உணர்தல் மிகவும் அவசியம்.

                                                  *  *  *

'ஜெய் பீம்' வில்லன் பெயர் 'குருமூர்த்தி' என்பதற்கான ஆதாரங்கள்:

'ஜெய் பீம் படத்தில் வில்லன் எஸ் ஐ குருமூர்த்தி தனது மிரட்டலான முக பாவனைகளாலேயே பார்வையார்களை அதிர வைத்து விடுகிறார்'[https://tamil.asianetnews.com/cinema/director-tamil-interview-about-jai-bheem-movie-police-character-r23dhe].

'...அதேபோல் இந்த படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டது, காடுவெட்டி குருவை குறிப்பது போல இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அது சர்ச்சையாகி உள்ளது'[https://tamil.oneindia.com/news/chennai/jai-bhim-director-gnanavel-explains-why-he-used-agni-kalasam-in-the-calendar/articlecontent-pf620195-439813.html].

==========================================================================