அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 24 நவம்பர், 2021

பெண்கள் பற்றிய 'படு படு படு' சுவாரசியத் தகவல்கள்!

*பெண்கள் தங்களுக்கான உடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு மட்டுமே, வாழ்நாளில் சுமார் ஓர் ஆண்டுக் காலத்தைச் செலவழிக்கின்றனர்.

*ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் பெண்கள் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தங்களது இரண்டு காதுகளால் ஒரே நேரத்தில் வெவ்வேறு விஷயங்களைக் கேட்டு உள்வாங்கும் திறனும் பெண்களுக்கு உண்டு.

*ஆண்களைவிட, குறைவாகவே பெண்கள் பொய் பேசுவார்கள். தாங்கள் பேசுவது பொய் என்று பிறர் கண்டுபிடிக்காதவாறு, உண்மைபோலவே பேசும் திறமை பெண்களிடம் உள்ளது. மேலும் மற்றவர்கள் பேசும் பொய்யை எளிதாகக் கண்டுபிடிக்கும் திறமையும் அவர்களுக்கு உண்டு.

*நுகரும் ஆற்றல் பெண்களுக்கு, ஆண்களைவிடவும் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். வண்ணங்களைப் பிரித்துப் பார்க்கும் ஆற்றலும் பெண்களுக்கு ஆண்களைவிட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, ஆண்களைவிடவும் பெண்களால் அதிக நிறங்களைப் பார்க்க முடியும்.

*ஆண்கள் ஒரு நாளுக்கு 5000 முதல் 7000 வார்த்தைகள் பேசுவார்கள். பெண்கள் ஒரு நாளுக்கு 20,000 வார்த்தைகள் அளவுக்குப் பேசுவார்கள். பெண்களுக்கு, தாங்கள் பேசுவதைப் பிறர் உன்னிப்பாகக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

*பெண்கள் உடல் அளவில் பலவீனமானவர்கள் என்பது பொதுவான கருத்து. உண்மையில் மனதளவில் மட்டுமின்றி, உடல் அளவிலும் பெண்கள் பலமிக்கவர்கள். வலியைத் தாங்கும் சக்தி ஆண்களை விடவும், பெண்களுக்கு அதிகமாக உள்ளது.

*உதட்டுச் சாயம் பயன்படுத்தும்போது நம்மை அறியாமல் அதை விழுங்க நேரிடும். அந்த வகையில் நாள்தோறும் உதட்டுச் சாயம் பயன்படுத்துவதன் மூலம், தங்கள் வாழ்நாளில் பெண்கள் உட்கொள்ளும் உதட்டுச் சாயத்தின் அளவு மட்டுமே 5 கிலோவுக்கும் அதிகமாம்.

*சிறு சிறு பிரச்சினைகளுக்குக்கூட பெண்கள் அதிகமாகக் கவலைப்படுவார்கள். அதேசமயம், அவர்களால் கவலைகளில் இருந்து சீக்கிரமே மீண்டுவர இயலும். அதுமட்டுமல்லாமல் பிரச்சினைகளுக்கான தீர்வையும் எளிதாகக் கண்டுபிடிப்பார்கள்.

*பெண்கள் அதிகமாக அழுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆண்டுக்கு 30 முதல் 60 முறை பெண்கள் அழுகின்றனர்.

*சுற்றி இருப்பவர்களைத் திருப்திப்படுத்தவும், மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தங்களைச் சரிப்படுத்திக்கொள்ளவும் பெண்கள் தயங்குவதில்லை. முக்கியமாக, ஆடை அலங்கார விசயத்தில் மற்றவர்களின் கருத்தைக் கவனமுடன் கேட்பதில் ஆர்வமுடையவர்கள்.

*தங்களின் கோபத்தைப் பெரும்பாலும் உணர்ச்சிகள் மூலமாகவும், வார்த்தைகள் மூலமாகவும் பெண்கள் வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். ஆண்கள் கோபத்தைச் செயல் வடிவத்தில் வெளிப்படுத்துவார்கள்.

*பெண்கள் அழுவதற்குப் பெரிதாக எந்தக் காரணமும் தேவை இல்லை. பெரும்பாலான பெண்கள் மற்றவர்கள் அழுவதைப் பார்த்தாலே அழுது விடுவார்கள்.

*ஆண்களைவிடப் பெண்களே இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்களாம்.

ஆகவே,

இனியேனும், ஆண்கள் பெண்களிடம் மிக மிக மிக மரியாதையுடனும், பணிவுடனும் நடந்துகொள்வார்களாக!

==========================================================================

நன்றி:

https://www.maalaimalar.com/health/womenmedicine/2021/11/15131133/3197207/Interesting-psychological-facts-about-women.vpf   -நவம்பர் 15, 2021 13:11 IST