"மிகவும் ஆபத்தான மாவட்டம் என்றால் வழிப்பறி கொள்ளை, வனவிலங்குகள் நடமாட்டம், ரவுடிகள் அட்டகாசம் என்று இவற்றில் எதை மனதில் வைத்துக் கேட்கிறீர்கள் என்று தெரியாது. இருப்பினும் என் அனுபவத்தின் மூலம் பதில் சொல்கிறேன்" என்று கூறிப் பதில்['quora.com'] தருபவர், ஜெயராமன் சின்னசாமி[தனியார் நிறுவன ஊழியர்; வயது 69,] மதுரை.
//நான் ஒரு மாவட்டத்தில் நீண்டகாலம் (50 ஆண்டுகள்) இருந்தேன். 1957ல் அங்கு மிகப் பெரிய சாதிக் கலவரம் நடந்தது. பலர் உயிரிழந்தார்கள். கலவரத்தை அடக்க வழிதெரியாமல் ஒரு சாதியைச் சேரந்த ஐந்து பேரைப் போலீசார் பிடித்துச் சென்று அவர்கள் கண்ணைக் கட்டி மண்டியிட வைத்துச் சுட்டுக் கொன்றார்கள்.
இதெல்லாம் முடிந்து 60 வருடங்களுக்குமேல் ஆகிவிட்டது. இப்போதும் அந்த மாவட்டம் சாதி வெறியில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.
நீங்கள் அந்த மாவட்டத்தில் பணியாற்ற வேண்டியிருந்தால் கேட்டவருக்கெல்லாம் உங்கள் சாதியைச் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் உங்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்கும்.
ஒரு சாதித் தலைவருக்கு ஆண்டுதோறும் விழா எடுப்பார்கள். அப்போது ஒரு வாரம் வீட்டைவிட்டு வெளியேறாமல் நீங்கள் இருக்க வேண்டும். அந்த ஊர்வலத்துக்குப் பாதுகாப்புக்காக வருகிற போலீசார் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பணியாற்றுவார்கள். அந்த நேரங்களில் அந்த இரண்டு சாதியைச் சேர்ந்தவர்களில் யாரிடமும் நீங்கள் வெளியில் சிரித்துப் பேசுவதும் அல்லது சந்திப்பதும் அவ்வளவு உகந்தது அல்ல.
நான் பெயரைச் சொல்லாவிட்டாலும் அது எந்த மாவட்டம் என்பதை நீங்கள் யூகித்திருப்பீர்கள். பள்ளிக்கூடத்திலும் நான் பணிபுரிந்த அலுவலத்திலும் அந்த இருதரப்பினரோடும் பழகியிருக்கிறேன். தாமரை இலைத் தண்ணீர் என்பார்களே அப்படித்தான் இருந்தேன். என்னுடைய அனுபவத்தில் ஆபத்தான மாவட்டம் என்பது அதுதான்.//
==========================================================================
நன்றி:
ஜெயராமன் சின்னசாமி[தனியார் நிறுவன ஊழியர்; வயது 69,] மதுரை.
==========================================================================
அமேசான் கிண்டிலில் என் புதிய நூல்: