அந்த நகரத்தின் பிரபலமான பரத்தையர் விடுதிகளில் அதுவும் ஒன்று.
அவ்வப்போது வருகை புரிந்து, பகுதி நேரப் பணியாக 'அதை'ச் செய்த பெண்களுக்கிடையே, நிரந்தரமாக அங்கேயே தங்கியிருந்து தொழில் புரிந்த பெண்களும் இருந்தார்கள். கவிதாவும் சுவிதாவும் அப்படிப்பட்டவர்கள்.
ஓய்வு நேரத்தில் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது, கவிதா சுவிதாவிடம் கேட்டாள்: "இன்னிக்கி எவ்வளவு 'டிப்ஸ்' வாங்கினே?"
வாங்கிய தொகையைச் சொன்னாள் சுவிதா.
வாய் பிளந்த கவிதா, "வழக்கம் போல இன்னிக்கும் நிறையவே டிப்ஸ் வாங்கியிருக்கே. நீ ஆள் சுமார்தான். உன்னைவிடவும் நான் ரொம்பவே அழகா இருக்கேன்னு நீயே சொல்லியிருக்கே. ஆனா, என்னைவிடவும் உனக்கு நிறைய 'டிப்ஸ்' தர்றாங்களே, அது எப்படி?" என்று மிகவும் வியந்து கேட்டாள்.
"தப்புப் பண்ணுறமேங்கிற உறுத்தல்; போலீஸ் பிடிச்சுடும்ங்கிற பயம்; சொந்தபந்தங்களுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுங்கிற எச்சரிக்கை காரணமா உண்டாகிற பதற்றம்னு இப்படிப் பல நெருக்கடிகளுக்கிடையே நம்மைத் தேடி ஆண்கள் வர்றாங்கன்னா, கட்டுப்படுத்த முடியாத அந்த உணர்ச்சிதான் காரணம்.
அதைத் தணிக்கும் முயற்சியில் இருக்கும்போது, 'ரேட்' கேட்கக்கூட மறந்துடுவாங்க. மனசு முழுக்கப் பாலுணர்ச்சியே நிரம்பி வழியுற அந்த நேரத்தில் கன்னத்தில் அழுத்தமா ஒரு முத்தம் பதிச்சிக் கையை நீட்டுனா, கணக்குப் பார்க்காம 'டிப்ஸ்' குடுக்கிறவங்க இருக்காங்க. இருப்பதை அப்படியே தூக்கிக் கொடுத்துட்டு ஊர் போகக் காசில்லாம திரும்பி வந்து வாங்கிட்டுப் போறவங்களும் உண்டு" என்று சொல்லி, வாய்விட்டுச் சிரித்த சுவிதா தொடர்ந்து சொன்னாள்:
சுமந்துவந்த பாரத்தை இறக்கிட்டா சுதந்திரமா சிந்திக்க ஆரம்பிச்சுடுவாங்க. ஓரங்கட்டி வைச்சிருந்த பயங்கள் ஒன்னொன்னா வந்து வரிசைகட்டி நிற்கும். இடத்தைக் காலி பண்ணிட்டு ஓட நினைக்கிற மனநிலையில் 'டிப்ஸ்' கேட்டா, நாம் எதிர்பார்க்கிறது கிடைக்காது. அந்தத் தப்பைத்தான் நீ செய்திட்டிருக்கேன்னு நினைக்கிறேன். இந்தத் தொழிலில் டிப்ஸ் வாங்கவும் கொஞ்சம் உளவியல் தேவைப்படுது."
"'அது'க்குன்னு அலையுற ஆண்கள் மனசை நல்லாவே படிச்சி வைச்சிருக்கே" -மனம் திறந்து சுவிதாவைப் பாராட்டிய கவிதா, "இந்தக் கேவலமான தொழிலில் சம்பாதிக்க சைகாலஜியும் தேவைப்படுது" என்று சொல்லி வேதனையுடன் சிரிக்கவும் செய்தாள்.
==========================================================================
'டிப்ஸ்' > தமிழாக்கம்... 'இன்பளிப்பு'?![ஹி... ஹி... ஹி!!!]